இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

 

 

இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தக தொடக்கத்தில் உயர்வுடன் தொடங்கி ஏற்ற இறக்கமான சூழலில் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 74,337.93 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 10.30 மணியளவில் 424.05 புள்ளிகள் உயர்ந்து 74,259.50 புள்ளிகளில் வர்த்தகமானது.

 

அதேவேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.35 புள்ளிகள் சரிந்து 22,983.30 புள்ளிகளில் வர்த்தகமானது. மேலும், நிஃப்டி மிட்கேப் 0.82 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 1.35 சதவீதமும் சரிவைக் கண்டன. துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ஐடி துறை பங்குகள் நல்ல ஏற்றத்தைப் பதிவு செய்தன. அதே நேரத்தில் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன.

 

சென்செக்ஸ் 30 முக்கிய நிறுவன பங்குகளில் 18 பங்குகள் உயர்வுடனும், 12 நிறுவன பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகின. இதனிடையே, வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.62 ஆக உயர்ந்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110.10 டாலராக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.