ஆயுத பூஜை: ``உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் - முதல்வர் விஜய் வாழ்த்து

நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழக மக்​களுக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். முதல்வர் விஜய் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக - எடப்பாடி பழனிசாமி

இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!" என தெரிவித்திருக்கிறார்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, ``ஆதிப​ராசக்​தியை துர்கை வடி​வில் வழிபட்​டால் வீரம் பிறக்​கும். லட்​சுமி வடி​வில் வழிபட்​டால் செல்​வம் பெரு​கும். சரஸ்​வதி வடி​வில் வழிபட்​டால் கல்வி சிறந்​தோங்​கும்.

இதையொட்​டியே நவராத்​திரி​யின் முதல் மூன்று நாள் துர்கா தேவியை​யும், அடுத்த 3 நாள் லட்​சுமியை​யும், கடைசி 3 நாட்​கள் சரஸ்​வ​தி​யை​யும் வணங்​கு​கிறோம்.

‘செய்​யும் தொழிலே தெய்​வம்’, ‘உழைப்​பின் மூலமே வெற்​றி’ என்​பதை உணர்த்​தும் வகை​யில் ஆயுத பூஜையை​யும், விஜயதசமியை​யும் கொண்​டாடும் தமிழக மக்​கள் அனை​வரும் அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்​போடு வாழ உளமார வாழ்த்​துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.