Jailer 2: திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு... - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்துப் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jailer 2 - Rajinikanth

முன்னதாக, ஜெயிலர் 2 படத்தில் மோகன்லாலின் சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவரின் ஆடை வடிவமைப்பாளர் காட்டமாக பேசியிருந்தார். மேலும், மோகன்லால் போன்ற ஒரு மாஸ் நடிகரின் காட்சிகளைக் கத்தரிப்பது தேவையற்றது எனக் குறிப்பிட்டு காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

இது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு அறிக்கையை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், "நேற்று நான் பதிவிட்ட கருத்துகள் அனைத்துமே ஒரு தீவிரமான மோகன்லால் சார் ரசிகனின் மனதிலிருந்து வெளிவந்தவை மட்டுமே.

அவரை மிக ஆழமாக நேசிக்கும் ஒரு ரசிகனாக, திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு எனக்கு இயல்பாகவே மனவருத்தம் ஏற்பட்டது.

View this post on Instagram

A post shared by JISHAD SHAMSUDEEN (@jishadshamsudeen)

அதேவேளையில், இந்தத் திரையுலகில் இயங்கும் ஒரு தொழில்நுட்பக் கலைஞனாக, படைப்பாளிகளின் சுதந்திரத்தையும், எடிட்டிங் மேஜையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் நான் முழுமனதாக மதிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.