UPSC/TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவச பயிற்சி முகாம் -சிறப்புரையாற்றும் விஜயகுமார் IPS

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

நீங்களும் ஆகலாம் IAS என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்நிகழ்வில் Dr.P. விஜயகுமார் IPS மாணவர்களிடையே உரையாற்ற இருக்கிறார்.

UPSC/TNPSC

Dr.P. விஜயகுமார் IPS-ஐ பொறுத்தவரை எம்.பி.பி.எஸ், எம்டி பட்டப்படிப்பு படித்த டாக்டர். பின்னர் சிவில் சர்வீஸில் தேர்வு எழுதி வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.

காவல்துறையில் பொதுவாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று பணிக்கு வரும் அதிகாரிகள் தங்களை விட ரேங்கில் குறைவாக இருக்கும் அதிகாரிகளிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார்கள்.

கொஞ்சம் அதிகார இடைவெளியை ஐபிஎஸ் அதிகாரிகள் கடைபிடிப்பதே வழக்கம். ஆனால் Dr. P விஜயகுமார் கொஞ்சம் வித்தியாசமானவர். அதிகாரிகளிடம் தன்மையாக பழகக்கூடியவர்.

பணியில் நேர்மையானவர். ஒரு முறை மதுராந்தகம் பகுதியில் விஜயகுமார் ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் பதற்றத்தில் ஓடி வரும் போது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. விஜயகுமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக சென்று, அந்த ஆய்வாளர் காலை பிடித்து முதலுதவி செய்தார்.

விஜயகுமார் IPS
விஜயகுமார் IPS

திருப்பத்தூரில் எஸ்.பியாக இருந்தபோது கொரோனா இரண்டாம் அலையை திறம்படக் கையாண்டு மக்களின் மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 27 ஆம் தேதி நடக்கும் இலவசப் பயிற்சி முகாமில் Dr. P விஜயகுமார் IPS போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

LINK : நீங்களும் ஆகலாம் IAS - UPSC/TNPSC வழிகாட்டி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.