Doctor Vikatan: டிரெண்டாகும் மெக்னீசியம் சப்ளிமென்ட்... அனைவருமே எடுத்துக்கொள்ளலாமா?

Doctor Vikatan:  மெக்னீசியம் சப்ளிமென்ட் எடுப்பது குறித்து சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அது எதற்கானது... யார், எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?  அதில் நிறைய வகைகள் உள்ளனவா? உணவின் மூலம்  மெக்னீசியம்    கிடைக்க வாய்ப்பில்லையா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர்


மெக்னீசியம் (Magnesium) என்பது நம் உடலில் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு உதவும் ஓர் அத்தியாவசிய தாதுச்சத்து (mineral) ஆகும். இது தூக்கமின்மை, தசைப்பிடிப்பு (muscle cramps), சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிறது என்பதற்காகவே, அதை  எல்லோரும் செய்ய வேண்டியதில்லை. அந்த வகையில் எல்லோருக்கும் மெக்னீசியம் சப்ளிமென்ட்ஸ் (supplements) தேவைப்படுவதில்லை. அது நீங்கள் சாப்பிடும் உணவு, உடலில் உள்ள மெக்னீசியம் குறைபாடு மற்றும் பிற ஆரோக்கிய நிலைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.

மெக்னீசியத்துக்கென பிரத்யேக நல்ல தன்மைகள் உள்ளன. அவை...

தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது.

நரம்பு மண்டலத்தை சப்போர்ட் செய்யும்.

ரத்த அழுத்தத்தை (blood pressure) சீராக வைக்க உதவுகிறது.

இன்சோம்னியா  எனப்படும் தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களுக்கு உதவுகிறது.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட உதவுகிறது.

மாதவிடாய்க்கால தசைப்பிடிப்புகளை (period cramps) சரி செய்ய உதவுகிறது.

உடலின் ஆற்றலை (energy) மேம்படுத்துகிறது.

தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலிக்கு (migraines) நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கலுக்கு (constipation) தீர்வாக அமைகிறது.

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்களுக்கு உதவுகிறது.

மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகளை உணரும்பட்சத்தில், அதற்கேற்ப மருத்துவ ஆலோசனையோடு அதற்கான சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில், 
தசைப்பிடிப்பு,  தசைச் சுருக்கம் / வலிப்பு (Muscle spasm), தசைகள் துடிப்பது (Muscle twitching),  தசை நடுக்கம் (Muscle tremors),  தசை பலவீனம் (Muscle weakness),  உடல் சோர்வு (Tiredness),
எரிச்சல் உணர்வு (Irritability),  மனச்சோர்வு / கவலை (Low mood),  தூக்கமின்மை / தூக்கக் கோளாறுகள் (Sleep disturbance), கவனச்சிதறல் (Difficulty to concentrate) போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மெக்னீசியம் கிளைசினேட் / பிஸ்கிளைசினேட் (Magnesium Glycinate/Bisglycinate), மெக்னீசியம் சிட்ரேட் (Magnesium Citrate), மெக்னீசியம் மாலேட் (Magnesium Malate), மெக்னீசியம் ஆக்ஸைடு (Magnesium Oxide), மெக்னீசியம் குளோரைடு (Magnesium Chloride), மெக்னீசியம் L-த்ரியோனேட் (Magnesium L-Threonate), மெக்னீசியம் லாக்டேட் (Magnesium Lactate), மெக்னீசியம் அஸ்பார்டேட் (Magnesium Aspartate), மெக்னீசியம் சல்பேட் (Magnesium Sulfate) என  மெக்னீசியத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.

பூசணி விதைகள், பாதாம், சியா விதைகள், எள், டார்க் சாக்லேட், வாழைப்பழம், தயிர், கீரை, கைக்குத்தல் அரிசி (brown rice), சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.

உணவு மூலமும் மெக்னீசியம் சத்தைப் பெற முடியும்.  பூசணி விதைகள், பாதாம், சியா விதைகள், எள், டார்க் சாக்லேட், வாழைப்பழம், தயிர், கீரை, கைக்குத்தல் அரிசி (brown rice), சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.  பொதுவாக மெக்னீசியம் சப்ளிமென்ட்டை இரவில் தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்வது மிகவும் நல்லது.

டயட்டீஷியன் கற்பகம்:
ஆர்ட் ஆஃப் ஈட்டிங் கிளினிக்கின் சீனியர் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் ட்ரெய்னிங் ஹெட். இத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.