ரோபோடிக் அறுவை சிகிச்சை: ரோபோ கனெக்ட் புதுச்சேரி - நிபுணர்களை அறிமுகம் செய்த அப்போலோ!
புதுச்சேரி அரசு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் டாக்டர் எஸ். செவ்வல், சென்னை அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நடத்தப்பட்ட ‘ரோபோ கனெக்ட் - புதுச்சேரி’ மருத்துவக் கலந்தாலோசனை நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார்.
இது தொடர்பாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சென்னை அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ‘ரோபோ கனெக்ட் - புதுச்சேரி’ மருத்துவக் கலந்தாலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இது அப்போலோ மருத்துவமனைகள், சென்னை ஏற்பாடு செய்த தகவல் பரிமாற்ற மருத்துவக் கலந்தாலோசனை நிகழ்ச்சியாகும்.
இதில் 30-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்களும், புதுச்சேரியின் முன்னணி மருத்துவர்களும் கலந்துகொண்டு நவீன ரோபோடிக் உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைகளின் வளர்ச்சி, அவை மருத்துவத் துறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, மேலும் நோயாளிகளுக்கு அது எவ்வாறு சிகிச்சையை வழங்குகிறது என்பது குறித்து தங்களுக்குள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
‘தொழில்நுட்பத்தையும் தாண்டி, மருத்துவம் மற்றும் நோயாளி நலனில் அர்த்தமுள்ள மாற்றங்கள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடந்தது. ரோபோக்களின் உதவியுடனான அறுவைசிகிச்சை, மருத்துவர்களின் அறுவை சிகிச்சைக்கான அனுபவப் பகிர்வு மற்றும் சிக்கலான மருத்துவ முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து விவாதிக்க இந்த நிகழ்வு மருத்துவர்களுக்கு ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
இந்த நிகழ்வில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் ரோபோடிக் சிகிச்சையின் துல்லியம், சரியான நோயாளிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த முக்கியக் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. மேலும், சென்னை மற்றும் புதுச்சேரி மருத்துவர்கள் தங்களுக்குள் அனுபவங்களை அறிந்துகொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நோயாளி நலன் சார்ந்த பார்வையில், ரோபோட் வழி அறுவைசிகிச்சையானது மிகுந்த துல்லியத்தையும் கட்டுப்பாட்டையும் தருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான சிகிச்சைகளில் இது ரத்த இழப்பைக் குறைக்கவும், சிகிச்சைக்குப் பின் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கவும், விரைவாக குணமடையவும் வழிவகுக்கிறது.

SSI Mantra, Meril, HUGO RAS மற்றும் Mako Stryker போன்ற பல்வேறு வகையான ரோபோடிக் அறுவைசிகிச்சை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டதே இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். பங்கேற்ற மருத்துவர்கள் இத்தொழில்நுட்பங்களை நேரில் இயக்கிப் பார்க்கவும், வெவ்வேறு வகையான அறுவைசிகிச்சை தேவைகளுக்கு எந்தெந்த கருவிகள் சிறந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி அவர்கள் கூறியது: அப்போலோ மருத்துவமனையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது வெறும் கருவிகளை வாங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. மாறாக, மருத்துவம் சார்ந்த ஒரு முழுமையான சூழலை உருவாக்குவதே எங்களது நோக்கமாக இருந்து வருகிறது. அதிநவீன தொழில்நுட்பமும், மருத்துவர்களின் மருத்துவ அனுபவமும் இணைவதிலேயே ரோபோடிக் சிகிச்சையின் உண்மையான பலன் நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.
இது சிகிச்சையில் அதிக துல்லியத்தையும் கட்டுப்பாட்டையும் தருவதோடு, ரத்த இழப்பைக் குறைக்கவும், விரைவாகக் குணமடைந்து நோயாளிகள் தங்களின் அன்றாட பணிகளுக்குச் சீக்கிரம் திரும்பவும் உதவுகிறது. சென்னையில் உள்ள எங்களது ரோபோடிக் அறுவைசிகிச்சை அனுபவத்தை, புதுச்சேரியில் பரந்தளவில் உள்ள மருத்துவச் சமூகத்தோடு இணைக்கும் பாலமாக இந்த ‘ரோபோ கனெக்ட்’ அமைந்துள்ளது. ரோபோடிக் சிகிச்சைத் துறை வளர்ந்து வரும் சூழலில், புதிய கண்டுபிடிப்புகளைப் பயனுள்ள மருத்துவ சிகிச்சைகளாக மாற்றுவதிலும், மேம்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சையை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதிலுமே எங்களின் கவனம் தொடர்ந்து இருக்கும்.
அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு தளங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான ரோபோடிக் அறுவைசிகிச்சை சூழலமைப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. da Vinci Xi, da Vinci 5, MAKO, HUGO RAS, SSI Mantra, MERIL, Globus ExcelsiusGPS மற்றும் VELYS போன்ற தொழில்நுட்ப ரோபோடிக் கருவிகள் இங்கே பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம், நோயாளியின் உடல்நிலை, அறுவைசிகிச்சையின் சிக்கல்தன்மை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் தேர்ந்தெடுக்க முடிகிறது.

அப்போலோ மருத்துவமனைகளில் யூராலஜி (சிறுநீரகவியல்), மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், இரைப்பை குடலியல், பொது அறுவைசிகிச்சை, கல்லீரல்-கணையம்-பித்தப்பை (HPB) அறுவைசிகிச்சை, காது, மூக்கு, தொண்டை (ENT), பெருங்குடல் அறுவைசிகிச்சை, மார்பக/மார்பகக் கூடு அறுவைசிகிச்சை, எலும்பியல், புற்றுநோயியல் மற்றும் இதயவியல் உள்ளிட்ட பல முக்கியப் பிரிவுகளில் ரோபோடிக் உதவியுடன் கூடிய அறுவைசிகிச்சை சேவை வழங்கப்படுகிறது.
ரோபோடிக் அறுவைசிகிச்சை பலவிதமான சிகிச்சைகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், ஒரே ஒரு ரோபோடிக் அமைப்பை மட்டும் சார்ந்திராமல், பல்வேறு தளங்களை அப்போலோ மருத்துவமனை பயன்படுத்துகிறது. இதனால் அறுவைசிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் மருத்துவத் தேவைக்கு ஏற்ற சரியான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இந்த அணுகுமுறையானது, நோயாளியின் பாதுகாப்பு, மருத்துவப் பலன்கள் மற்றும் நோயாளியின் தனிப்பட்ட தேவைகளை மையமாகக் கொண்டு அறுவைச் சிகிச்சை குறித்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
‘ரோபோ கனெக்ட்’ மூலம், சென்னை மற்றும் புதுச்சேரி மருத்துவர்களுக்கிடையேயான மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அறிவுப் பகிர்வை மேம்படுத்தவும், துல்லியமான அறுவைசிகிச்சை முறைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையுமே அப்போலோ மருத்துவமனை இலக்காகக் கொண்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனைகள் குறித்து: இதன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, 1983-ல் சென்னையில் முதல் மருத்துவமனையைத் தொடங்கினார். 78 மருத்துவமனைகளில் 10,900 படுக்கைகள், 7200+ மருந்தகங்கள், 300 கிளினிக்குகள், 2,500 நோயறிதல் மையங்களுடன் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநராக அப்போலோ குழுமம் இப்போது வளர்ந்துள்ளது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டிகள், 2,00,000-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள், 30,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை இதுவரை செய்துள்ள அப்போலோ, மேம்பட்ட சிகிச்சையை வழங்க புதிய தொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

