டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள அறிவுரைகளை பார்ப்போம்...
காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து நான்கு நாட்கள் முதல் 6 நாட்கள் முக்கியமானவை. உடல் சோர்வு, கண்களுக்கு பின்னால் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் டெங்குவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்..
டெங்கு நோயாளிகள் மருத்துவமனை செல்லாமல் தாமதிப்பது உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்தப்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்..
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிக நீராகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.. காய்ச்சல் பாதித்த மூன்று நாட்களுக்குப் பிறகு குறைந்துவிட்டாலும் எச்சரிக்கை தேவை என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

