இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..


இந்தியாவுக்குள் எப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்ததோ அப்போதே பணி புரியும் பழக்கம் மாறிவிட்டது. குறிப்பாக மென்பொருள் துறையில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு இரவு நேர பணி (Night Shift) கொடுக்கப்படுகிறது. இதனால் இரவு முழுவதும் பணி செய்துவிட்டு அவர்கள் பகலில் தூங்குகிறார்கள். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்

ஊழியர்கள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணிபுரிந்தால் உடலின் இயல்பான நேரச்சுழற்சி பாதிக்கப்படும். அதோடு, டைப் - 2 சர்க்கரை நோய், இதய கோளாறு, ஹார்மோன் சமநிலை குலைவு என பல உடல்நல பிரச்சினைகள் உருவாகும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன், பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரப்பு குறைவதால் அது இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பகல் முழுவதும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளே தூங்குவதால் உடலுக்கு போதுமான சூரிய ஒளியும் கிடைக்காமல் வைட்டமின் D குறைபாடு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், வேறு வழியில்லாமல் பல ஊழியர்கள் இரவு நேரத்தில் பணி புரிந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.