நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..


கடந்த பல வருடங்களில் இரவில் தாமதமாக உணவு அருந்தும் பழக்கம் இளைஞர்களிடம் மிகவும் அதிகரிக்கிறது. குறிப்பாக 15- 25  வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஐடி துறையில் வேலை செய்பவர்கள் ஆகியோர் இரவில் 10 மணிக்கு மேல் உணவு அருந்த பழகிவிட்டனர்.

அதுவும் பல இடங்களில் இரவு நேர பிரியாணி வந்துவிட்டது. இரவு 12 மணி, 1 மணி, 2 மணிக்கெல்லாம் போய் பிரியாணி சாப்பிடுகிறார்கள். ஆனால் நள்ளிரவில் உணவு உண்பதால் கல்லீரல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என Oregon Health and science பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நள்ளிரவில் உண்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் 20 முதல் 30 சதவீதமாக இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரவு உணவை மிகவும் விரைவாகவே சாப்பிட வேண்டும்.. இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் இடையே இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது என ஒரு பக்கம் மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.