ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ தனது அதிநவீன ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 21-ஆம் தேதி ஸ்பெயினின் மஜோர்காவில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யவுள்ளது. புகைப்பட கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நோக்கில் Hasselblad உடன் இணைந்து இந்த போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சீரிஸில் ஃபைண்ட் X10 மற்றும் ஃபைண்ட் X10 புரோ மேக்ஸ் ஆகிய இரு மாடல்கள் வெளிவரவுள்ளன. ஃபைண்ட் X10 மாடல் இரட்டை 200MP கேமரா அமைப்பையும், புரோ மேக்ஸ் மாடல் உலகின் முதல் மூன்று 200MP கேமரா அமைப்பையும் கொண்டுள்ளன. புரோ மேக்ஸ் மாடலின் மூன்று கேமராக்களிலுமே 4K @ 120fps மற்றும் 8K @ 30fps வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
இரு போன்களிலும் ஃபிளாக்ஷிப் மீடியாட்க் சிப்செட், LUMO ட்ரூ இமேஜ் என்ஜின், ColorOS 17 இயங்குதளம் மற்றும் பிரம்மாண்டமான 8,000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி இடம்பெற்றுள்ளன. ஒரே சார்ஜில் 2 நாட்கள் வரை தாங்கும் இந்த பேட்டரி, 5 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள நிகழ்வில் இதன் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


