AI-ல் உருவாக்கப்பட்ட போட்டோவா? இனி கண்டுபிடிக்கலாம்... Check வைத்த Google!

ஒரு போட்டோவைப் பார்க்கும்போது இது உண்மையாக எடுக்கப்பட்டதா… அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறதா? குறிப்பாக சமூக வலைதளங்களில் AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உண்மையான தகவலையும் AI உருவாக்கிய தகவலையும் பிரித்துப் பார்ப்பது சவாலாகி வருகிறது. இதற்கான ஒரு புதிய முயற்சியாக, Google தனது ‘SynthID Detector’ கருவியை தற்போது அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக 2025-ம் ஆண்டு பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் மற்றும் ஆய்வாளர்கள் மட்டும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வந்த இந்தக் கருவி, தற்போது உலகம் முழுவதும் பொதுமக்களுக்கும் கிடைக்கிறது. இதில் ஒரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ கோப்பை பதிவேற்றினால், அந்த உள்ளடக்கத்தில் AI மூலம் உருவாக்கப்பட்டதற்கான SynthID watermark இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க முடியும்.

SynthID எப்படி வேலை செய்கிறது?

AI மூலம் ஒரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ உருவாக்கப்படும் போதே, அதற்குள் மனிதர்களால் பார்க்கவோ கேட்கவோ முடியாத வகையில் ஒரு டிஜிட்டல் watermark சேர்க்கப்படுகிறது. இதுதான் SynthID. இந்த அடையாளத்தை SynthID Detector கண்டறிந்து, அந்த கோப்பில் Google அல்லது அதன் கூட்டணி நிறுவனங்களின் AI பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கிறது.

இந்த watermark சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாது என்பதுடன், படத்தை crop செய்வது, நிறத்தை மாற்றுவது, வீடியோவின் frame rate-ஐ மாற்றுவது அல்லது file-ஐ compress செய்வது போன்ற சில மாற்றங்களுக்குப் பிறகும் கண்டறியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Google-ன் SynthID Detector, Google-ன் AI tools மட்டுமின்றி, OpenAI, NVIDIA, Kakao போன்ற நிறுவனங்களின் SynthID watermark செய்யப்பட்ட content-ஐயும் கண்டறிய உதவுகிறது. Apple-க்கான ஆதரவும் விரைவில் வரவுள்ளதாக Google தெரிவித்துள்ளது.

ஆனால், SynthID எல்லா AI content-ஐயும் கண்டுபிடிக்கும் 100 சதவிகிதமான AI detector கிடையாது. SynthID watermark பயன்படுத்தப்படாத AI tools மூலம் உருவாக்கப்பட்ட content-ஐ இந்தக் கருவி கண்டறியாமல் போகலாம். எனவே, Detector-ல் watermark இல்லை என்பதற்காக அந்தப் படம் அல்லது வீடியோ நிச்சயமாக உண்மையானது என்று முடிவு செய்ய முடியாது.

AI content அதிகரித்து வரும் நிலையில், சந்தேகத்துக்குரிய ஒரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோவை சரிபார்க்க பொதுமக்களுக்கு கிடைக்கும் இன்னொரு verification tool ஆக SynthID Detector பயன்படலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.