Starlink-ஐ இந்தியாவுக்குள் வரவிடாமல் பெருமுதலாளிகள் தடுக்கிறார்கள் - எலான் மஸ்க் குற்றச்சாட்டு

உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்தான் ஸ்டார்லிங்க்.

செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் இந்த இண்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எலான் மஸ்க் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த இணையச் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால், இந்தியாவில் மலை, காடு, மலைமுகடுகள் என அனைத்து இடங்களிலும் எந்தத் தடங்கலும் இன்றி தொடர்ந்து அனைவருக்கும் இணையச் சேவை கிடைக்கும்.

எலான் மஸ்க்

இந்த இணையச் சேவைக்கான ஒதுக்கீட்டை வழங்க இந்திய அரசுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் உண்டு. இந்த நெறிமுறைகளில் சில ஒத்துப்போகாததால்தான் ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் இந்தியாவிற்குள் இன்னும் நுழைய முடியவில்லை.

மேலும், ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக இந்த இணையச் சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் களத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க் குற்றச்சாட்டு

இந்த நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள சில பெருமுதலாளிகள் எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.

அவர்கள் யார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.

இது இந்திய மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு குற்றம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்தப் பதிவில் யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.