10 மாதங்களில் 45 கிலோ கட் : `என்னவெல்லாம் சாப்பிட்டேன் தெரியுமா? - வைரலாகும் பெண்ணின் Diet Plan
உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு உணவுமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், Saakshi Singh என்ற Content Creator தனது எடை குறைப்பு பயணம் குறித்துப் பகிர்ந்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
Saakshi, 10 மாதங்களில் 45 கிலோவுக்கும் அதிகமாக எடையைக் குறைத்துள்ளார். தனது பயணத்தைத் தொடங்கியபோது சுமார் 115 கிலோ எடையில் இருந்த அவர், பின்னர் சுமார் 70 கிலோ வரை எடையைக் குறைத்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது உணவுமுறையில் ஒரே உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடாமல், பல்வேறு உணவுகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டுள்ளார். குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
காலை உணவாக மூங் தால் சீலா, பெசன் சீலா, குறைந்த கொழுப்பு கொண்ட பனீர், ஸ்கைர் தயிர், மூங் தால் உப்புமா, மூங் தால் இட்லி, பனீர் ஸ்டஃப்டு ராகி தோசை உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மதிய உணவில் பிரவுன் ரைஸ் மூங் தால் கிச்சடி, சோயா-பட்டாணி சப்ஜி, ரொட்டி, மசூர் தால், பாலக் தால் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சில நேரங்களில் எண்ணெய் அல்லது நெய் இல்லாமல் தயாரிக்கப்பட்ட பனீர் அல்லது சிக்கனையும் எடுத்துள்ளார். இதனுடன் வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் உள்ளிட்ட சாலட்டையும் சேர்த்துள்ளார்.
மாலை நேரத்தில் பழங்கள், காக்ரா, வறுத்த கொண்டைக்கடலை, மகானா அல்லது நட்ஸ் போன்றவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொண்டுள்ளார். இரவு உணவில் பனீர் அல்லது சிக்கன் கிளியர் சூப், மூங் தால் சூப், காய்கறி சூப் உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்துள்ளார்.

ஒரு நாளைக்கு சுமார் 1,400 முதல் 1,700 கலோரிகள் மற்றும் 85 முதல் 120 கிராம் புரதம் எடுத்துக்கொள்வதை இலக்காக வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறைந்தது 12 மணி நேர overnight fasting window-ஐ பின்பற்றியதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்த உணவுமுறை Saakshi-ன் தனிப்பட்ட எடை குறைப்பு பயணத்துக்கானது. ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் உணவுத் தேவைகள் வேறுபடுவதால், இதை அனைவருக்கும் பொருந்தும் diet plan-ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

