கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 10a ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 6,000 உயர்த்தி அதிரடி காட்டியுள்ளது. இந்தியாவில் அறிமுகமானபோது ரூ. 49,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது ரூ. 55,999 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அக்டோபர் 9 அன்று தொடங்கும் ஃப Flipkart பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் விற்பனையின் போது, வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 10a போனில் 6.3 இன்ச் 120Hz pOLED டிஸ்ப்ளே, டென்சார் G4 பிராசஸர், 8GB RAM மற்றும் 256GB சேமிப்பகம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 48MP + 13MP கேமரா அமைப்பு, 5,100 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் 7 ஆண்டுகள் மென்பொருள் அப்டேட்களும் வழங்கப்படுகின்றன. விலை உயர்ந்திருந்தாலும், பண்டிகைக் கால தள்ளுபடி விற்பனை இதனை வாங்கச் சரியான வாய்ப்பாக அமையும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


