மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு... கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம்...

 

 

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக வட்டி விகிதத்தை  25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பணவீக்க அழுத்தங்கள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கை குழு, தனது கொள்கை நிலப்பாட்டை நியூட்ரல் நிலையிலிருந்து காலிபிரேட்டட் டைட்னிங் நிலைக்கு மாற்றியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும் அதே வேளையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் அவசியம் எனக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

நடப்பு நிதியாண்டிற்கான  ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7.1 சதவீதமாகவும், சிபிஐ பணவீக்க கணிப்பை 5.2 சதவீதமாகவும் ஆர்பிஐ நிர்ணயித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடன் வாங்கியவர்களுக்கான மாதத் தவணை  மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் சற்றே உயரக்கூடும். 

 

இருப்பினும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 11 மாத இறக்குமதிக்கு போதுமானதாக பலமாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.