தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம்; டெல்லியில் ராகுல் காந்தி கைது!

டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தியா கூட்டணி பேரணி

பாதுகாப்புப் பணிக்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சிலர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.