போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

 

சமீபத்திய சரிவுப் போக்கிலிருந்து மீண்டெழுந்த இந்தியப் பங்குச் சந்தைகள், வலுவான ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தக முடிவில் மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 472.77 புள்ளிகள் உயர்ந்து 72,382.47 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 133.80 புள்ளிகள் உயர்ந்து 22,555.75 புள்ளிகளாகவும் நிலைபெற்றன.

 

அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வந்ததால், அந்நாட்டு ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. மேலும், சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 102 டாலராகக் குறைந்ததும் பணவீக்கம் குறித்த அச்சத்தைத் தணித்து பங்குச் சந்தை மீட்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

 

சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் கணிசமான உயர்வைச் சந்தித்தன. அதேவேளையில் ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் சரிவைக் கண்டன.

 

இதனிடையே, ஹெச்டிஎஃப்சி வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அனுப் பாக்ச்சி நியமிக்கப்பட ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. உலகளாவிய சூழல் சாதகமாக உள்ள நிலையில், வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவனங்களின் நிதி முடிவுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.