2வது நாளாகவும் மோசமாக சரிந்த பங்குச்சந்தை.. இந்த 3 காரணங்கள் தான்...

 

 

இந்திய பங்குச்சந்தை நேற்று போலவே இன்றைய வர்த்தகத்திலும் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்த நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,600 புள்ளிக்கும் கீழே சரிந்தது. இந்த திடீர் வீழ்ச்சிக்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

 

முதலாவதாக, அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 107 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள இந்தியாவிற்கு இது நிதியியல் நெருக்கடியை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

இரண்டாவதாக, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகளின் விலைகள் கடுமையாக சரிந்தன. காப்பீட்டு துறையில் கொண்டுவரப்பட உள்ள புதிய மாற்றங்கள் காரணமாக நிதித்துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.

 

மூன்றாவதாக, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக அந்நிய முதலீடுகள் வெளியேறுவது பங்குச்சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.