இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு.. நீண்ட இடைவெளிக்கு பின் 96.14.. வலிமை அடையும் அமெரிக்க டாலர்...

 

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருவதும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களும் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் நேரடி விளைவாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு  அதிரடியாக 15 பைசா சரிந்து 96.14 நிலையை எட்டியுள்ளது.

 

சந்தையின் தொடக்க நேரத்திலேயே உளவியல் ரீதியாக முக்கியமான 96 என்ற வரம்பை உடைத்த இந்திய ரூபாய், தொடர்ந்து சரிவை நோக்கி நகர்ந்தது. வணிக நேரத்தின் முடிவில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 95.98 ஆக நிலைபெற்றது. உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

 

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெறுவதும் ரூபாயின் மதிப்பைக் கீழ்நோக்கித் தள்ளுகின்றன. 

 

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பது பணவீக்கத்தைக் கூட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வரவிருக்கும் நாட்களில் மேற்கு ஆசிய நிலவரங்கள் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களே ரூபாயின் எதிர்கால மதிப்பைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.