Doctor Vikatan: டெங்கு பாதிப்பு: எந்தெந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டுத்தரும்?

Doctor Vikatan: டெங்கு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை... தட்டணுக்களை (Platelets) விரைவாக அதிகரிக்க உதவும் உணவுகள் உண்மையில் இருக்கின்றனவா... பழங்கள் சாப்பிடலாமா?


பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்

டெங்கு காய்ச்சல் வரும்போது நிறைய திரவ உணவுகளையும், அதிக அளவிலான தண்ணீையும் குடிக்க வேண்டும். இளநீர், எலக்ட்ரோலைட்ஸ் (Electrolytes), காய்கறி சூப் (Vegetable soups) மற்றும் எலும்புத் துண்டுகள் (Bone pieces) போட்டு வைக்கப்பட்ட கோழி இறைச்சி சூப் (Chicken bone soup) போன்றவற்றை அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

மென்மையான, காரமில்லாத (Soft & bland) உணவுகளைச் சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ரசம் சாதம், மோர் சாதம், கஞ்சி போன்றவை. பெரும்பாலும் கஞ்சியாகச் சாப்பிடுவது மிகவும் நல்லது. கஞ்சியிலேயே கொஞ்சம் பருப்பு, காய்கறிகள் சேர்த்து எளிதில் செரிமானமாகும் வகையில் சாப்பிடுவது சிறந்தது.
குடலில் வீக்கம் (Inflamed bowel) இருப்பதால் கடினமான உணவுகளைச் செரிப்பது கடினமாக இருக்கும். எனவே, நார்ச்சத்துகளை (Fibers) அதிக அளவு தவிர்ப்பது நல்லது.

பிளேட்லெட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இரண்டும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். ரத்த தட்டணுக்களை (Platelets) அதிகரிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை நார்ச்சத்து இல்லாமல் ஜூஸாக (Juice) எடுத்துக்கொள்வது நல்லது. 

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை (Egg white) நோய் எதிர்ப்பு சக்திக்காகச் சேர்த்துக் கொள்ளலாம்.

பப்பாளி இலையைக் கொதிக்க வைத்துப் பருகினால் பிளேட்லெட்டுகள் நிச்சயம் அதிகரிக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த பப்பாளி, கிவி, ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.
காரமான உணவுகள் (Spicy food), எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகள் (Non-veg) போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அசைவத்தை சூப்பிற்கு மட்டும் பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவை (Egg white) நோய் எதிர்ப்பு சக்திக்காகச் சேர்த்துக் கொள்ளலாம்.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்:

உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகராக 30 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் ஆக்ஸிமெட் மருத்துவமனையில் டயட்டீஷியனாகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.