The Paradise: எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகள், இடைவிடாத உழைப்பு! - நெகிழும் நானியின் மனைவி

நானி நடிப்பில் உருவாகியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், திரையுலகில் நானியின் 16 ஆண்டுகாலப் போராட்டம் குறித்து அவரின் மனைவி அஞ்சனா எலவர்த்தி சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டிருக்கிறார்.

The Paradise Movie

அந்தப் பதிவில், "திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதுடன், தி பாரடைஸ் திரைப்படம் திரைக்கு வந்துள்ள இந்தத் தருணத்தில் எனது மனம் உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது.

உதவி இயக்குநராகத் தொடங்கி, இன்று ஒரு நடிகராக இத்தனை கோடிக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்றிருப்பது சாதாரண விஷயம் அல்ல.

சொல்லப்போனால், இந்த விஷயங்களெல்லாம் ஒரே நாளில் கிடைத்துவிடவில்லை.

இதற்குப் பின்னால் எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகள், இடைவிடாத உழைப்பு, தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், சினிமா மீது அவர் கொண்ட அசைக்க முடியாத காதல் ஆகியவை இருக்கின்றன.

View this post on Instagram

A post shared by Anjana Yelavarthy (@anjuyelavarthy)

ஒவ்வொரு படத்துக்கும் அவர் காட்டும் அர்ப்பணிப்பை மிக அருகில் இருந்து பார்த்தவள் நான். இன்று அவர் அடைந்திருக்கும் இந்த உயரம் முற்றிலும் அவரது சொந்த உழைப்பால் மட்டுமே சாத்தியமானது. உங்களை நினைத்து எப்போதும் பெருமைப்படுகிறேன்!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.