``பாக்கெட் உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை” -FSSAI முடிவு; ஏன் தெரியுமா?
கடையில் பாக்கெட் உணவு வாங்கும்போது, அதில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு உள்ளிட்ட சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பாக்கெட்டின் பின்பக்கத்தில் இருக்கும் Nutrition தகவல்களைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும். இதை எளிதாக்கும் வகையில், பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்திலேயே எச்சரிக்கை லேபிள்களை வைக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI முன்மொழிந்துள்ளது.
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், அதிக அளவு Added Sugar, Added Fat அல்லது Salt கொண்ட குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் சிவப்பு நிற Hexagon (ஆறுபக்க வடிவம்) கொண்ட Warning Label இடம்பெறலாம். இது வெள்ளை நிற Square வடிவத்துக்குள் இருக்கும். எந்த சத்து அதிகமாக இருக்கிறதோ, அதன் பெயரும் அதில் குறிப்பிடப்படும். பாக்கெட்டின் மேல் இடதுபுறத்தில் இந்த லேபிள் தெளிவாகத் தெரியும்படி வைக்க முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு சத்து மட்டுமே வரம்பைத் தாண்டினால் அந்த சத்தின் பெயரும், இரண்டு அல்லது மூன்று சத்துக்கள் வரம்பைத் தாண்டினால் அவை அனைத்தும் ஒரே Hexagon-க்குள் குறிப்பிடப்படும்.
எந்த உணவுகளுக்கு இந்த எச்சரிக்கை?
ஒரு உணவு Processed Food அல்லது Packagedfood என்பதற்காக மட்டும் இந்த Warning Label வராது. அதில் உள்ள Added Sugar, Added Fat மற்றும் Salt அளவைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படும்.
இதற்கான அளவு வரம்புகள், ICMR-NIN-ன் 2024 Dietary Guidelines for Indians அடிப்படையில் நிர்ணயிக்கப்பட உள்ளன. உதாரணமாக, Liquid Food-ல் 100 ml-க்கு 2 கிராமுக்கு அதிகமான Added Sugar அல்லது 175 mg-க்கு அதிகமான Salt இருந்தால், அந்த சத்துக்கான வரம்பைத் தாண்டியதாகக் கருதப்படும். Solid Food-ல் 100 கிராமுக்கு 4.2 கிராமுக்கு அதிகமான Added Fat அல்லது 625 mg-க்கு அதிகமான Salt இருந்தால், அந்த சத்துக்கான வரம்பைத் தாண்டும். இவை FSSAI-ன் affidavit-ல் கொடுக்கப்பட்ட உதாரண அளவுகள்.
Total Sugar, Saturated Fat கணக்கில் வருமா?
இந்த முன்மொழிவில் Total Sugar-க்கு பதிலாக Added Sugar மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பழங்கள், பால் போன்றவற்றில் இயற்கையாக இருக்கும் சர்க்கரையும், உணவு தயாரிக்கும்போது சேர்க்கப்படும் சர்க்கரையும் வேறுபட்டவை என்பதே இதற்குக் காரணம்.
அதேபோல், Saturated Fat-ஐ மட்டும் கணக்கில் கொள்ளாமல் Added Fat அடிப்படையில் Warning வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. Trans Fat ஏற்கெனவே தனியாக லேபிளில் குறிப்பிடப்படுவதுடன், அதற்கென தனி கட்டுப்பாடுகளும் உள்ளன. எனவே, அதை அப்படியே Total Fat கணக்கில் சேர்க்கும் முறையாக இது இருக்காது.
பானங்களுக்கும் விதிமுறை ;
சில வகை பானங்களில், அதன் Beverage Category-யையும் முன்பக்கத்தில் குறிப்பிட முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட Sugar அல்லது Salt அளவு வரம்பைத் தாண்டினால், அதற்கான Nutrient Warning-ம் இடம்பெறும்.
மேலும், Non-Caloric Sweetener பயன்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களில், முன்பக்கத்திலேயே “CONTAIN NON CALORIC SWEETENER” என்ற வாசகத்தையும் குறிப்பிட முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் பின்பக்கத்தில் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பாக்கெட்டின் பின்பக்கத்தில் உள்ள Nutrition தகவல்களைத் தேடாமல், முக்கியமான ஊட்டச்சத்து எச்சரிக்கைகளை முன்பக்கத்திலேயே நுகர்வோர் எளிதாகப் பார்க்க முடியும். ஆனால், இவை தற்போது FSSAI முன்மொழிந்துள்ள மாற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
