இப்ப என்ன பண்றாங்க? : லைம்லைட்ல இல்லாத எனக்கு அவர் அதை பண்ணனும்னு அவசியம் இல்ல! - நடிகை ஐஸ்வர்யா

`அண்ணாமலை தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா. திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து விலகியவர் வெளிநாட்டில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

ஐஸ்வர்யா

" நான் நடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு 15 வயசு. பெருசா எதுவும் தெரியாதுதான்.. அப்பலாம் ஷூட்டிங் போக மாட்டேன்னு நான் அழுத நாட்கள் எல்லாம் உண்டு. எங்க குடும்ப சூழல் தான் நான் இந்தத் துறைக்குள் வந்ததுக்கான காரணம். என்ன வாய்ப்பு என்னைத்தேடி வந்ததோ வந்ததுல என்னால எவ்ளோ பெஸ்டா பண்ணமுடியுமோ பண்ணேன். என் கரியர்ல மிகப்பெரிய பிரேக்னா `அண்ணாமலை சீரியல்ல ஜோதி கதாபாத்திரம்தான்! 

சினிமா, சீரியல்னு நடிச்சிருந்தாலும் என்னோட சாய்ஸ் சீரியலாகத்தான் இருந்தது. ஆர்யா நடிச்சிருந்த `ஒரு கல்லூரியின் கதை படத்துல நானும் நடிக்கிறதா இருந்தது. அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். அதே தேதியில் எனக்கொரு தெலுங்கு சீரியல் ஆஃபர் வந்துச்சு. இந்தப் பட வாய்ப்பு வேண்டாம்னு சொல்லி அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டு சீரியல்ல நடிக்கப் போயிட்டேன். டெலிவிஷன் போதுங்கிற முடிவுக்கு அப்பவே வந்துட்டேன்!" என்றவரிடம் விஜய்சேதுபதியுடன் நடித்தது குறித்துக் கேட்டோம்.

ஐஸ்வர்யா

" `பெண் சீரியல்ல விஜய் சேதுபதி எனக்கு அண்ணன். அட்டகத்தி தினேஷ் எனக்கு தம்பி! `மகாராஜா பட புரொமோஷன் டைம்ல என்னோட சிஸ்டர் விஜய் சேதுபதி சாரை மீட் பண்ணியிருந்தாங்க. அவங்க என்னைப்பத்தி சொன்னதும் அவர் உடனே எனக்கு வீடியோகால் பண்ணச் சொல்லி என் சிஸ்டர் எனக்கு ஃபோன் பண்ணாங்க. வீடியோ கால்ல நாங்க நடிச்ச சீன்லா குறிப்பிட்டு சொல்லி என்கிட்ட பேசினார். இப்ப நான் லைம்லைட்ல கூட இல்ல! லைம்லைட்ல இல்லாத எனக்கு அவர் அப்படியெல்லாம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல.. ஆனா, அவர் அதை பண்ணார்!" என்றவர் நடிகை வடிவுக்கரசி குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

" அவங்க என்னோட அம்மா! என் சொந்த அம்மாவுடைய பெயரைக்கூட `மம்மினு தான் செல்போன்ல பதிவு பண்ணி வச்சிருக்கேன். ஆனா, வடிவுக்கரசி அம்மாவை `அம்மானு தான் வச்சிருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. என் பெரிய பையனுக்கு 15 வயசு. சின்னப் பொண்ணுக்கு 8 வயசாகுது. அவங்க அம்மாவை அம்மம்மான்னு தான் கூப்டுவாங்க. இப்பவும் அவங்ககிட்ட பேசிட்டுதான் இருக்கேன்!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஐஸ்வர்யா

" நிறைய நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன். நானா எதையும் தேர்வு செஞ்சதில்ல. வந்த கதாபாத்திரத்துல நடிச்சேன். `நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லனு எனக்குத்தெரியும். அதனால அந்தப்பக்கம் எல்லாம் போகல!" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.