Doctor Vikatan: பச்சிளம் குழந்தைக்கு டயாப்பர் அணிவித்துப் பழக்கலாமா?

Doctor Vikatan: என் தோழிக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அவள் குழந்தைக்கு டயாப்பர் போடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாள். அது குழந்தைக்கு நல்லதல்ல என்கிறாள். என் குழந்தைக்கு நான் ஒரு வருடமாக டயாப்பர் அணிவித்துக் கொண்டிருக்கிறேன்.  என் தோழி சொல்வது சரியா... நான் செய்வது சரியா.... என்ன முடிவெடுப்பது?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்

மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வசதிக்காக 24 மணி நேரமும் குழந்தையை டயாப்பருடன் இருக்க விடுவதைப் பார்க்கிறோம். அது மிகவும் தவறு. 

மற்றபடி பிறந்த குழந்தைகளுக்குச் சரியான அளவுள்ள, தரமான டயாப்பர்களை முறையாகப் பயன்படுத்தலாம். தற்போது கிடைக்கும் டயாப்பர்கள் சிறுநீர் மற்றும் கழிவுகளை நன்கு உறிஞ்சும் திறன் உடையவாக இருக்கின்றன. ஈரத்தினால் ஏற்படும் அவதிகளைத் தவிர்த்து, குழந்தைகள் சிரமமின்றி நன்கு உறங்குவதற்கு இந்த டயாப்பர்கள் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. 

குழந்தைக்கு ஒருமுறை டயாப்பர் அணிவித்தால் அதை அடுத்த மூன்று, நான்கு மணி நேரத்துக்கு மாற்றத் தேவையில்லை. பெற்றோருக்கும் அடிக்கடி துணி மாற்றுவது, துவைப்பது போன்ற சிரமங்கள் இதனால் தவிர்க்கப்படுகின்றன.

diaper

தரமான, நல்ல மெட்டீரியலில் செய்யப்பட்ட டயாப்பர்களை குழந்தை தூங்கும்போதும், பயணத்தின் போதும், தவிர்க்க இயலாத நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு  3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் டயாப்பரை மாற்ற வேண்டியது அவசியம். பல மணி நேரம் டயாப்பர் அணிவிப்பதால் குழந்தைக்கு புண் ஏற்படாமல், சருமம் பாதிக்கப்படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.