இன்று தங்கத்தில் ரூ.50000 முதலீடு செய்தால் 2036ஆம் ஆண்டு எவ்வளவு கிடைக்க வாய்ப்பு? ஆச்சரிய தகவல்...!
கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை விற்கப்பட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டில் அதன் விலை ரூ.1,53,250 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 18.6 சதவிகித கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது. ஆனால், கடந்த காலத்தில் கிடைத்தது போல் எதிர்காலத்திலும் அதே அளவு லாபம் கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
உலக தங்க கவுன்சிலின் கணிப்புப்படி, வரும் காலங்களில் தங்கத்தின் சராசரி ஆண்டு வருவாய் 5.2 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒருவேளை ஆண்டுக்கு 8 அல்லது 10 சதவிகிதம் வருவாய் கிடைத்தால், இன்று செய்யும் ரூ.50,000 முதலீடு 2036-ஆம் ஆண்டிற்குள் ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.30 லட்சமாக உயரக்கூடும். அதேசமயம், கடந்த கால சாதனையே தொடர்ந்தால் இந்த மதிப்பு ரூ.2.75 லட்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. எனவே, தங்கத்தில் முதலீடு செய்யும் போது ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி போன்ற கூடுதல் செலவுகளைத் தவிர்க்க கோல்ட் ஈடிஎஃப் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை பரிசீலிப்பது புத்திசாலித்தனமாகும்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

