TN Assembly: `கர்நாடகாவில் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களுக்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது? - உதயநிதி கேள்வி | Live

மேட்டூர் அணை விவகாரம்...

கோவி.செழியன் - மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?

அமைச்சர் ஆனந்த் - விரைவில் நல்ல செய்தி வரும்

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்கள் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு வறட்சியில் இருக்கின்றன. இப்போது அணையில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது. எப்போது அணையை திறப்பீர்கள்?

- மாரிமுத்து

மேட்டூர் அணை விவகாரம்!

சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

அவர்களின் உடற்கூராய்வு ரிப்போர்ட் இப்போது வெளியாகியிருக்கிறது.

அதில் மூன்று பேரும் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுசம்பந்தமாக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?

தென் மாநில நிர்வாகக்குழு கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் வந்தபோது அவரிடம் தமிழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதா?"

உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தொடர்ந்து காணலாம்; இணைந்திருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.