10 ஆண்டுகளில் பணக்காரர் ஆக வேண்டுமா? NRI முதலீட்டாளர்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான்!

40 வயதைக் கடந்துவிட்டீர்கள். வெளிநாட்டில் நல்ல வருமானம் வருகிறது. பல வருடங்களாகக் கஷ்டப்பட்டுச் சேமித்தும் வருகிறீர்கள்!

ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு மட்டும் இன்னும் நம்மிடம் தெளிவான பதில் இருக்காது: “இன்னும் 10 வருடங்களில் நான் முழுமையான நிதிச் சுதந்திரத்துடன் (Financial Freedom) இருக்க வேண்டுமென்றால், இன்று நான் என்ன செய்ய வேண்டும்?”

பெரும்பாலானவர்கள் இதற்கான பதிலைத் தேடும்போது முதலில் தேடுவது இதைத்தான்: “எந்த இன்வெஸ்ட்மென்ட் அதிக ரிட்டர்ன்ஸ் (Returns) தரும்?”

ஆனால் இந்தப் பார்வை முற்றிலும் தவறானது!

செல்வம் என்பது ரிட்டர்ன்ஸில் தொடங்குவதில்லை; இலக்கில் தொடங்குகிறது

10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் செல்வம் உருவாக வேண்டும் என்றால், அது லாபம் தரும் பங்குகளைத் தேடுவதில் தொடங்குவதில்லை.

உதாரணமாக, இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கையில் ₹3 கோடி வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் கேள்வி "எந்த ஃபண்ட் 15% ரிட்டர்ன் தரும்?" என்பதாக இருக்கக் கூடாது.

மாறாக, "அந்த ₹3 கோடியை அடைய என்னுடைய கால அவகாசம், மாத முதலீட்டுத் தொகை மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் எப்படி இருக்க வேண்டும்?" என்பதுதான் சரியான கேள்விகளாக இருக்க முடியும். இதுதான் ஒரு முறையான வெல்த் பிளானிங்கின் (Wealth Planning) அடிப்படை.

செபி (SEBI) அமைப்பும்கூட, முதலீட்டு முடிவுகளைத் தனிப்பட்ட நிதி இலக்குகள், முதலீட்டுக் காலம் மற்றும் ரிஸ்க் வரம்புகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது. குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் சந்தை சார்ந்த ஆபத்துகள் (Market Risks) இருப்பதால், உங்கள் தேவைக்கு ஏற்ற ஆபத்தை நீங்கள் புரிந்துகொள்வது மிக அவசியம்.

NRI Investment Plan

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு (NRIs) இது ஏன் இன்னும் முக்கியம்?

இன்று நீங்கள் சம்பாதிப்பது வெளிநாட்டு நாணயத்தில் (Foreign Currency) இருக்கலாம்; ஆனால் நாளை உங்களுடைய ஓய்வுக்காலம் (Retirement) இந்தியாவில் இருக்கக்கூடும். அதோடு குழந்தைகளின் உயர்கல்வி, சொந்த வீடு வாங்குவது, பெற்றோருக்குரிய தேவைகள் எனப் பல இலக்குகள் வெவ்வேறு காலகட்டங்களில் வரலாம்.

அதனால்தான், ஏதோவொரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் மட்டும் போதாது; எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த ஒரு தெளிவான திட்டம் (Integrated Plan) தேவைப்படுகிறது.

உங்கள் 10 ஆண்டு வெல்த் பிளானின் 4 முக்கிய படிகள்

உங்கள் வெல்த் நம்பரைக் கண்டுபிடியுங்கள்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் எதிர்காலத் தேவைகளுக்குச் சரியாக எவ்வளவு தொகை (Corpus) வேண்டும் என்பதை முன்கூட்டியே கணக்கிடுங்கள். பொதுவாக உங்களின் ஆண்டுச் செலவு போல 25-35 மடங்குப் பணம் என்பது தொடக்க இலக்காக இருக்க வேண்டும்!

அந்த எண்ணை மாத முதலீடாக மாற்றுங்கள்: இலக்கு என்னவென்று தெளிவாகத் தெரிந்த பிறகு, அதற்கேற்ற கால அவகாசம் மற்றும் எதிர்பார்க்கப்படும் லாபத்தின் அடிப்படையில் மாதாந்திர முதலீட்டைத் திட்டமிட வேண்டும் (SIP - Systematic Investment Plan).

மியூச்சுவல் ஃபண்டுகளை உத்தியாகப் பயன்படுத்துங்கள்: ஒரே ஒரு குறிப்பிட்ட பங்கை அல்லது யாரோ சொல்லும் ஹாட் டிப்ஸைத் தேடிப் பிடிப்பதற்குப் பதிலாக, உங்கள் இலக்கிற்கேற்ற பல்துறை சார்ந்த டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை (Diversified Portfolio) உருவாக்குவது நல்லது.

தொடர்ந்து முதலீடு செய்து, அவ்வப்போது ரிவ்யூ செய்யுங்கள்: முதலீடு செய்துவிட்டு 10 ஆண்டுகள் அதைப் பார்க்காமல் இருப்பதும் தவறு; அதே நேரத்தில் தினமும் அதன் NAV மதிப்பை கவனித்து டென்ஷன் ஆவதும் தவறு. ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் முதலீட்டைச் சரிபாருங்கள்.

முதலீடு
முதலீடு

தவிர்க்க வேண்டியவை என்னென்ன?

  • "மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது; அதனால் கொஞ்சம் தள்ளிப்போடலாம்" என்று காத்திருப்பது.

  • நண்பர் யாரோ சொன்னார் என்பதற்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஃபண்டில் பணத்தைப் போடுவது.

  • ஒரே ஒரு ஸ்டாக்கில் அல்லது ஒரு துறையில் மட்டும் முழுப் பணத்தையும் போட்டு ரிஸ்க்கை அதிகரிப்பது.

  • மிக முக்கியமாக, "இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறதே" என்று நிதித் திட்டமிடலைத் தள்ளிப்போடுவது.

40 வயதில் தொடங்கும் 10 ஆண்டுத் திட்டமும், 45 வயதில் தொடங்கும் 10 ஆண்டுத் திட்டமும் ஒரே மாதிரி இருக்க முடியாது. இதுவரை முதலீடு செய்யவில்லை என்றாலும் உடனே துவங்குவது நீண்ட காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.

அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் செல்வம் எப்படி வளர வேண்டும், அதற்கு எவ்வளவு தொகை தேவை, எந்த மாதிரியான போர்ட்ஃபோலியோ உத்தி உங்களுக்குச் சரியாக இருக்கும் என்பதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?

Labham Workshop for NRIs - August 22 2026

NRI-களுக்கான சிறப்பு ஆன்லைன் முதலீட்டு வகுப்பு விவரங்கள்:

  • தலைப்பு: 10 ஆண்டுகளில் பணக்காரர் ஆவது எப்படி? - NRI-களுக்கான சிறப்பு நிதி திட்டமிடல் + கல்வி வகுப்பு

  • நாள்: ஆகஸ்ட் 22, 2026, சனி

  • நேரம்: மதியம் 1:30 - 3:00 மணி (இந்திய நேரம்)

  • பேச்சாளர்: டீம் லாபம்

ஆன்லைன் வகுப்பில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-aug22-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug22_2026

உங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கான பணக்காரப் பயணத்திற்கு அடித்தளம் அமைக்க, இந்த ஆன்லைன் வகுப்பில் உடனே பதிவு செய்யுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.