தமிழ்நாடு முன்னாள் படை வீரர்களின் மகள்கள் திருமணத்திற்கு ரூ.50,000 நிதியுதவி - விஜய் |சுதந்திர தினம் | Live Updates
சுதந்திர தின விழா உரையில் விஜய்யின் புதிய அறிவிப்புகள்:
1. தமிழ்நாடு முன்னாள் படை வீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்வு.
2. மாற்றுதிறன் கொண்ட படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மாதந்திர நிதியுதவி ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்வு.
3. மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு.
4. மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்வு.
5. வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்கம், மருது சகோதரர்கள், வ.உ.சி வழிதோன்றல்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு.
விஜய் உரை
"மக்களே... ஓட்டு போட்டுவிட்டோம். கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள். இனிமேல் தான் நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். எங்கள் அரசுடன் உறுதியாக இருக்க வேண்டும்.
அப்போது தான் உங்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்படுத்த முடியும்".
இதில் மத்திய அரசை எதிர்ப்போம்
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்புடன் இருக்கிறோம்.
ஆனால், தமிழ்நாடு நலன் என்று வந்துவிட்டால், மாநில உரிமைக்கு எதிரான முடிவுகளையும் சரி, தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கை முடிவுகளையும் சரி தவெக அரசு எப்போதும் எதிர்க்கும்.

இதுவும் விடுதலைக்கு சமம் தான்
நம்மை அடிமையாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாலே, மக்கள் ஒன்றுகூடுவார்கள். அங்கே தான் சாதி, மதம் உடையும். அப்படி உடையும் இடத்தில் கிடைப்பதே சுதந்திரம்.
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி மகாத்மா காந்தி வாங்கி தந்த சுதந்திரத்தை பிடித்து படிப்படியாக முன்னேறி வருகிறோம்.
தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமம் தான். அதை நோக்கி தான் தவெக அரசு செயல்பட்டு வருகிறது.
கொடியேற்றிய விஜய்
சென்னை கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதன் பின்னர், கொடி வணக்கம் செலுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சராக முதன்முறையாக கொடியேற்றியுள்ளார் விஜய்.


அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய்
கோட்டை கொத்தாளத்திற்கு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிடுகிறார் விஜய்.
இந்நிகழ்வில் நடிகை திரிஷா, முதல்வர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், அவரது தாய் ஷோபா சந்திரசேகர், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தினம். தவெக ஆட்சி அமைத்தப் பிறகு வரும் முதல் சுதந்திர தினம் ஆகும் இது.
இன்று சென்னை ஜியார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.
சென்னை ஜியார்ஜ் கோட்டையில் நடக்கும் சுதந்திர தின நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


