மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..
பொதுவாக பலருக்கும் ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவை சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஒரு நாளைக்கு வைக்கப்பட்ட குழம்பை இரவில் ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் முழுவதும் சூடு பண்ணி சாப்பிடுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். தினமும் சமைக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் பலரும் அப்படி செய்கிறார்கள்.
ஆனால், அப்படி செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். சில உணவுகள் மட்டுமே சூடு பண்ணி சாப்பிடும்போது பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும் அது கூட ஒரு நாள்தான். ஆனால், சிலரோ ஒரு குழம்பை 2 நாட்கள் கூட வைத்து சூடுபண்ணி சாப்பிடுகிறார்கள். அது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்.
இந்நிலையில், மீண்டும் சாப்பிடக்கூடாத 4 உணவுகளை பார்ப்ப்போம்.
சிக்கனை சூடு பண்ணி சாப்பிடக்கூடாது. அது விஷமாக மாறியிருக்கும் வாய்ப்புண்டு...
முட்டையை சூடு பண்ணி சாப்பிடக்கூடாது.. வயிற்று வலி ஏற்படும்.
கீரையை மீண்டும் சூடுபண்ணி சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.
வேக வைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால் அது செரிமான பிரச்சனைகளை கொண்டுவரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

