SIP: `என்னது, மாதாமாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்யலாமா? - சிறு துளியை பெருவெள்ளமாக்கும் எஸ்.ஐ.பி!

மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் முதலீடு செய்யும் SIP முறையில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய்கூட கட்டலாம் என்பது பலருக்கும் தெரியாத தகவல். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே மாதந்தோறும் ரூ.1000, ரூ.2000 கட்டவேண்டும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது சரியான தகவல் அல்ல.

இன்றைக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் மாதச் சம்பளம் ஈட்டுகிறவர்கள்கூட ஒவ்வொரு மாதமும் 1,000 மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் முதலீடு செய்ய முடியும். என்றாலும் என்னால் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாயை முதலீடு செய்ய முடியாது என்று சொல்கிறவர்கள், மாதந்தோறும் 100 ரூபாயைக்கூட முதலீடு செய்யலாம்.

ஏற்றம்

இப்படி மாதந்தோறும் 100 ரூபாயை முதலீடு செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்கிறீர்களா?

உங்கள் வீட்டில் இப்போது ஒரு குட்டிப் பாப்பா பிறந்திருக்கிறாள் அல்லது ஒரு குட்டிப் பையன் பிறந்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குட்டிப் பாப்பா பிறந்த மாதம் முதலே மாதந்தோறும் SIP முறையில் 100 ரூபாயை முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கு அடுத்த 10, 20, 30, 50 வயதில் எவ்வளவு சேர்த்திருக்கும் தெரியுமா?

பணம்
பணம்

மாதந்தோறும் ரூ.100 என 10 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பணம் கட்டினால் மொத்தம் 12,000 ரூபாயைக் கட்டியிருப்பீர்கள். இதற்கு 12% லாபம் கிடைத்தால், உங்களுக்கு ரூ.22,404 திரும்பக் கிடைக்கும்.

மாதந்தோறும் ரூ.100 என 20 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பணம் கட்டினால் மொத்தம் 24,000 ரூபாயைக் கட்டியிருப்பீர்கள். இதற்கு 12% லாபம் கிடைத்தால், உங்களுக்கு ரூ.91,986 திரும்பக் கிடைக்கும்.

மாதந்தோறும் ரூ.100 என 30 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பணம் கட்டினால் மொத்தம் 36,000 ரூபாயைக் கட்டியிருப்பீர்கள். இதற்கு 12% லாபம் கிடைத்தால், உங்களுக்கு ரூ.3,08,097 திரும்பக் கிடைக்கும்.

மாதந்தோறும் ரூ.100 என 40 ஆண்டுகள் தொடர்ந்தால், ரூ.9,79,307, 50 ஆண்டுகள் தொடர்ந்தால், ரூ.30,63,983 உங்களுக்குக் கிடைக்கும்.

100 ரூபாய் மிகக் குறைவு என்கிறவர்கள் மாதந்தோறும் ரூ.200 கட்டலாம். ஏன், ரூ.500, ரூ.1000 என்றுகூட நீண்ட காலத்துக்குக் கட்டலாம். 500 ரூபாயை 30 ஆண்டுகளுக்கு SIP முறையில் தொடர்ந்து கட்டினால், ரூ.15,40,487-மும், 1000 ரூபாயை 30 ஆண்டுகள் கட்டினால், ரூ.30,80,973-மும் திரும்பக் கிடைக்கும். அதாவது, நீங்கள் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறீர்களோ, அதைப் போல 10 மடங்கு பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதுதான் மிக மிக முக்கியமான விஷயம்!

மாதந்தோறும் 100 ரூபாய் முதல் 500 ரூபாயை முதலீடு செய்யத் தயார் என்கிறவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்குவது மிக மிக எளிது. இதற்கு உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கிச் சேமிப்புக் கணக்கு மட்டும் இருந்தால் போதும். இவை போக நாமினியாக யார் நியமிக்கப்படுகிறாரோ, அவரது ஆதார் கார்டு எண் அவசியம் வேண்டும்.

இந்த ஆவணங்களை எல்லாம் தந்தால், உங்களுக்கு கே.ஒய்.சி (Know Your Customer) செய்து, மியூச்சுவல் ஃபண்டில் உடனே ஒரு முதலீட்டுக் கணக்கை ஆரம்பித்துவிடலாம். இதன் பிறகு எஸ்.ஐ.பி முறையில் நீங்களும் ரூ.100, 250, ரூ.500, ரூ.1000 என முதலீடு செய்ய ஆரம்பித்துவிடலாம்.

சிறு துளி பெருவெள்ளம் என்கிற பழமொழியை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பதை மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் முதலீடு செய்யும்போது நீங்களே உணர்வீர்கள்.

இந்த 80-வது சுதந்திர தினத்தில் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு SIP கணக்கைத் தொடங்கி, முதலீடு செய்யத் தவறாதீர்கள்!

SIP முறையில்   நீங்களும்   முதலீடு   செய்ய   வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.