30% - 40% சந்தை சரிந்தால் என்னாவது? உங்கள் பணத்தைக் காக்கும் ‘Asset Allocation’ செய்துவிட்டீர்களா?

நண்பரே! மாதம் பிறந்ததுமே கடினமாக உழைத்த சம்பளத்தில் மிச்சப்படுத்தி, "எப்படியாவது சீக்கிரம் பெரிய பணக்காரன் ஆகிடணும்!" என்ற கனவோடு முதலீடு செய்யத் தொடங்கும் நபரா நீங்கள்?

பங்குச்சந்தை எகிறும்போது, "அடடா... இந்த ஃபண்டில் போட்டிருந்தா ஒரே வருஷத்துல 30% லாபம் வந்திருக்குமே!" என்று தோன்றும். உடனே, நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ, வாட்ஸ்அப் குரூப் டிப்ஸ்களை நம்பியோ உங்களின் ஒட்டுமொத்த சேமிப்பையும் ஒரே வகையான பங்குகளில் அல்லது ஒரே மியூச்சுவல் ஃபண்டில் கொண்டுபோய் கொட்டுவீர்கள்.

ஆரம்பத்தில் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால், அங்கேதான் ஒரு பேரபாயம் ஒளிந்திருக்கிறது.

ஒரே கூடையில் எல்லா முட்டைகளும்!

யோசித்துப்பாருங்கள்... உலகளவில் ஒரு போரோ, பொருளாதார மந்தநிலையோ அல்லது எதிர்பாராத அசாதாரண சூழ்நிலையோ வரும்போது சந்தை திடீரென 30% முதல் 40% வரை சரசரவெனச் சரிந்தால் என்ன ஆகும்?

உங்களின் பல வருட உழைப்பும் சேமிப்பும் ஒரே இரவில் பாதியாகக் கரையும்போது, ரத்த அழுத்தம் எகிறும்; தூக்கம் தொலைந்து போகும். "முதலீடாவது... பாழாப்போன சந்தையாவது!" என்று மனமுடைந்து, நஷ்டத்திலேயே எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு முதலீட்டுப் பக்கமே தலைவைத்துப்படுக்க மாட்டீர்கள்.

பணவீக்கத்தை வீழ்த்தி நிம்மதியான வாழ்க்கையைப் பெற நினைத்த உங்களின் நீண்டகாலக் கனவு, ஒரே ஒரு தவறான மூவினால் தவிடுபொடியாகிவிடும்.

Loss

இதோ உங்களுக்கான சூட்சுமம்: அசெட் அலோகேஷன்!

பெரிய அளவில் லாபமும் வர வேண்டும், அதே நேரத்தில் சந்தை விழுந்தாலும் என் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை? அதற்கு ஒரே தீர்வு: ‘அசெட் அலோகேஷன்’ (Asset Allocation) எனும் சொத்துப் பங்கீடு.

வரலாறு சொல்லும் உண்மை:1986-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற நிதி ஆராய்ச்சியில் (Brinson Study), ஒரு போர்ட்ஃபோலியோவின் நீண்டகால வெற்றியில் 90% பங்கு அசெட் அலோகேஷனுக்கே உரியது; நாம் தேர்ந்தெடுக்கும் தனிப்பட்ட பங்குகளுக்கு அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!

அசெட் அலோகேஷன் என்பது உங்கள் முதலீட்டுப் பணத்தை ஒரே இடத்தில் குவிக்காமல், மூன்று முக்கியத் துறைகளில் பிரித்து முதலீடு செய்வது:

  1. பங்குச்சந்தை (Equity): நீண்டகால அடிப்படையில் பணவீக்கத்தை அடித்து நொருக்கி 12%-14% வரை நல்ல வளர்ச்சி தரும் எஞ்சின்.

  2. கடன் பத்திரங்கள் (Debt/FD): சந்தை சரிந்தாலும் உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு அதிர்வு தாங்கியாக (Shock Absorber) செயல்பட்டு நிலையான வட்டி தரும்.

  3. தங்கம் (Gold): பொருளாதாரப் புயல் வீசும்போது உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்.

Financial Freedom | Crorepati
Financial Freedom | Crorepati

உங்கள் வாழ்க்கை எப்படி மாறும்?

சரியான அசெட் அலோகேஷன் திட்டமிடுதலைச் செய்துவிட்டால், சந்தைப் புயல் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பங்குச்சந்தை வீழும்போது தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் உங்களைக் காக்கும்; சந்தை உச்சமடையும் போது ஈக்விட்டி உங்களைக் கோடீஸ்வரனாக்கும்!

தினமும் பங்குச்சந்தை வரைபடத்தைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. சந்தை ஏற்ற இறக்கங்களைக் கண்டு பதறாமல், நிம்மதியான உறக்கத்தோடும், தெளிவான திட்டமிடலோடும் உங்கள் செல்வத்தைப் பெருக்கலாம்!

ஆனால், "என் வயதுக்கு, என் வருமானத்திற்கு, என் இலக்குகளுக்கு ஏற்ப ஈக்விட்டி, டெப்ட், தங்கம் மூன்றையும் எந்த விகிதத்தில் பிரிக்க வேண்டும்?" என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?

உங்களுக்கான சிறப்பு ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

Labham Workshop on August 12 2026

உங்கள் முதலீட்டுப் பயணத்தைப்ke பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் மாற்ற இதோ ஒரு பொன்னான வாய்ப்பு!
செல்வத்தை வளர்க்கும் அசெட் அலோகேஷன் - செய்வது எப்படி?

முதலீட்டில் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் கொடுக்கும் அசெட் அலோகேஷனின் முக்கியத்துவம் மற்றும் திட்டமிடல் குறித்த ஆன்லைன் நிகழ்ச்சி

  • நாள்: ஆகஸ்ட் 12, 2026, புதன்

  • நேரம்: மாலை 07:00 - 08:30 மணி (இந்திய நேரம்)

  • பேச்சாளர்: ஜெயகுமார், Chartered Financial Analyst (CFA)

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-aug12-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug12_2026

இன்றே முன்பதிவு செய்யுங்கள்; உங்கள் நிதி சுதந்திரத்திற்கான கதவைத் திறந்து வையுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.