இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி
ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்த்தப்பட்டது. காலையில் சவரனுக்கு ₹1,280 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ₹960 உயர்ந்து மொத்தமாக ₹2,240 அதிகரித்துள்ளது.
இதன் மூலம், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹13,480-க்கும், ஒரு சவரன் ₹1,07,840க்கும் விற்பனையாகிறது. அதேபோல, 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ₹14,705-க்கும், ஒரு சவரன் ₹1,17,640-க்கும் உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹105,600-க்கு விற்பனையான நிலையில், இன்று இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹240.00-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ₹2,40,000 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேசச் சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளே இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


