Regal Jewellers: புதிய சமூகநல முயற்சியுடன் தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ்!
தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்ச்சரர் மற்றும் ஹோல்சேலர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் தனது முதல் ஷோரூம், தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது.48 ஆண்டுகால பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம் மூலம், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது தனித்துவமான, மேனுஃபேக்ச்சரரிடமிருந்து நேரடியாக நகை வாங்கலாம் என்கிற வணிக முறையை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளை மேனுஃபேக்ச்சரரிடமிருந்து நேரடியாக மொத்த விலையில் வாங்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றது.
தமிழ்நாட்டில் ரீகல் ஜுவல்லர்ஸின் முதல் ஷோரூமை, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.JCD. பிரபாகர் அவர்கள் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.VMS. முஸ்தபா அவர்கள், ரீகல் ஜுவல்லர்ஸ் சேர்மன் திரு. சிவதாசன் TK, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. விபின் சிவதாஸ், அரசு உயர் அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரீகல் ஜுவல்லர்ஸ், தரம், கலைநுணுக்கம் மற்றும் நேர்மை ஆகியவற்றுடன் கேரளா மற்றும் கர்நாடகாவில் பல தலைமுறை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்ச்சரர் மற்றும் ஹோல்சேலர்களில் ஒன்றான இந்த நிறுவனம், தனது சொந்த உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் நேர்த்தியான நகைகளை மேனுஃபேக்ச்சரர்களிடம் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம், தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சிறந்த, தனித்துவமான நகை வாங்கும் அனுபவத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ரீகல் ஜுவல்லர்ஸ் வருகையின் முக்கிய அம்சமாக, ரீகல் சுமங்கலி நேர்மை விழா என்ற சமூக நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ,பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள 25 தம்பதிகளின் திருமணத்தை ரீகல் ஜுவல்லர்ஸ் முழுமையாக ஏற்று நடத்துகிறது.
இந்த சமூக பொறுப்புணர்வு மிக்க திட்டம் ரீகல் ஜுவல்லர்ஸின் நிறுவனர் மற்றும் சேர்மன் திரு. சிவதாசன் TK. அவர்களின் சிந்தனையில் உருவானது. “ஒவ்வொரு புதிய தொடக்கமும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் புதிய தொடக்கங்களை உருவாக்க வேண்டும்” என்ற அவரது நம்பிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த தருணத்தில், புதிய ஷோரூம் திறப்பதோடு மட்டுமல்லாமல், 25 தம்பதியினர் தங்களது வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உதவுவதன் மூலம், இந்த தருணத்தை அர்த்தமுள்ள நிகழ்வாக மாற்றியுள்ளது ரீகல் ஜுவல்லர்ஸ்.

தங்களது மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற உயர்வான எண்ணத்தின் வெளிப்பாடாக இந்த திட்டம் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரீகல் ஜுவல்லர்ஸ் தங்களின் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் திரு. VMS.முஸ்தபா அவர்கள், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது பயணத்தை தொடங்கியதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.மேலும் அதன் சமூக அக்கறை மிக்க திட்டத்தை பாராட்டி நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரீகல் ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. விபின் சிவதாஸ் கூறியதாவது:
"ரீகல் ஜுவல்லர்ஸுக்கு சென்னை அளித்துள்ள அன்பான வரவேற்பிற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மறக்கமுடியாத தொடக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த எங்கள் மதிப்பிற்குரிய விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
சென்னையில் தனது முதல் ஷோரூமைத் திறந்துள்ள ரீகல் ஜுவல்லர்ஸ், தமிழ்நாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக நகை உற்பத்தியில் பெற்றுள்ள சிறப்புமிக்க அனுபவத்தையும், மேனுஃபேக்ச்சரரிடமிருந்து நேரடியாக நகை வாங்கலாம் என்ற தனது வணிக முறையையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. அடுத்ததாக புதுச்சேரியில் தனது ஷோரூமைத் திறக்கவுள்ள இந்த நிறுவனம், வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பல ஷோரூம்களைத் தொடங்கி தனது கிளைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ரீகல் ஜுவல்லர்ஸ் குறித்து:
1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரீகல் ஜுவல்லர்ஸ், தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்ச்சரர் மற்றும் ஹோல்சேலர்களில் ஒன்றாகும். கலைநுணுக்கம் மற்றும் தரத்திற்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், HUID ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள், சர்வதேச தரச்சான்று பெற்ற வைர நகைகள், பிளாட்டினம் நகைகள்,ஜெம்ஸ்டோன், லைட்வெயிட் 18 காரட் மற்றும் 14 காரட் தினமும் அணியும் நகைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நகைகளை அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் தயாரித்து வழங்கி வருகிறது.

அதிநவீன உற்பத்தி நிலையங்களை சொந்தமாகக் கொண்டுள்ள ரீகல் ஜுவல்லர்ஸ், மேனுஃபேக்ச்சரரிடம் இருந்து நேரடியாக மொத்த விலையில் நகைகளை வாங்கும் தனித்துவமான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சிறந்த தரம், கலைநுணுக்கத்திற்கு பெயர்பெற்றது. கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. மேலும் ரீகல் ஜுவல்லர்ஸ் தென்னிந்தியா முழுவதும் தனது பயணத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


