நீட் போராட்டம், காவிரி: அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்! - தயாநிதி மாறன் மறைமுக சாடல்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட கால திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. அதன் பின், தவெக உடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ்.

இதன் பிறகு, திமுகவும், காங்கிரஸ் மாறி மாறி விமர்சித்து வருவது தொடர்கதையாகி விட்டது.

இப்போது திமுகவைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் காங்கிரஸை மறைமுகமாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
திமுக - காங்கிரஸ்

"நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்! தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமை குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!

நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!

பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!

ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!

டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!

தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது!

அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.