தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.

தொகுதி மறுவரையறையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம்.

பாஜக - திமுக

2029-லேயே தேர்தல் வந்துவிடும். நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லி பாஜக திமுகவிற்கு ஆசைக்காட்டுகிறது.

ஆனால் திமுக அந்தப் பாதையில் சென்றால் இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக மோசமான முடிவுகள்தான் வரும்.

தமிழகத்தில் தவெக கூட்டணி வலுவாக இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்தில் உள்ளன. திமுக தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் விபரீதங்கள் அவர்களுக்கு அதிகமாக வரும்.

தவெக தோழமைக் கட்சிகளின்  ஆலோசனைக் கூட்டத்தில்....
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்....

தவெக 5 வருடங்கள் நன்றாக ஆட்சி நடத்தலாம். அவர்களுக்கு எந்தவிதமான புது எம்எல்ஏக்களும் தேவையில்லை. யாரும் ராஜினாமா செய்துகொண்டு தவெகவில் சேர வேண்டும் என்ற அவசியமும் கிடையாது" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.