`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்! - என்ன நடந்தது?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை முதல்வர் விஜய் இன்று கொடுத்திருந்தார். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமோஷனல் ஆக, அதைப் பார்த்து முதல்வர் விஜய்யும் கதறி அழுதிருக்கிறார்.

Vijay

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு முதல்வர் விஜய் இன்று அரசு வேலைக்கான நியமன ஆணையை வழங்கினார். கரூரில் நடந்த இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைக் கண்டு முதல்வர் விஜய் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

நியமன ஆணையைப் பெற்ற குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம். ``மாமல்லபுரத்துக்கு அழைத்து ஆறுதல் சொன்னபோதே விஜய் எங்களின் காலில் விழுந்து அழுது கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டிருந்தார். இன்றைக்கும் எங்களை பார்த்த உடனேயே அவர் உடைந்துவிட்டார்.

Vijay
Vijay

எங்களுக்கும் மனம் ஏதோ கனமாகிவிட்டது. நாங்களும் அழுதுவிட்டோம். நாங்கள் அழுததைக் கண்டு முதல்வர் இன்னமும் வருந்தி அழுதார். மன்னிச்சுடுங்க... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன் என்று தைரியமும் சொன்னார். எங்களின் இழப்பை எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. ஆனால், எங்களின் எஞ்சிய வாழ்க்கையை ஓட்ட இந்த அரசு வேலை உதவியாக இருக்கும்" என்றனர்.

31 பேருக்கும் பணி நியமன ஆணையை வழங்கிய விஜய், திருச்சி வந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.