அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: சவரன் ரூ.1,09,600-ஐ எட்டியது!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ரூ.13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,200 அதிகரித்து, ரூ.1,09,600 என்ற வரலாற்றுச் சாதனை விலையை எட்டியுள்ளது. அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,945 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,19,560 ஆகவும் உயர்ந்துள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்து ரூ.260-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக, ஒரு கிலோ ரெடி வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்து, ரூ.2,60,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம் போன்ற காரணங்களால் இந்தத் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


