கங்கா விரைவுச்சாலை திறப்பு விழா!! திமுக - சமாஜ்வாதி கூட்டணியை பிரதமர் மோடி விமர்சனம்!!

ஈரான்-அமெரிக்க போருக்கு பிறகும் இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கப்பட்டதற்கு பாஜக அரசின் நடவடிக்கைகளே காரணம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டர் ₹900-940 க்கு கிடைக்கிறது. உஜ்வலா திட்டத்தில் ₹500-600 வரை கிடைக்கிறது. போரால் வெளிநாடுகளில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ₹1500-2200, இங்கிலாந்தில் ₹1800-2500, ஜெர்மனியில் ₹3500-4500, ஜப்பான்-நார்வேயில் ₹3500-6000 வரை உள்ளது. வணிக சிலிண்டரும் இந்தியாவில் ₹3000-3300 என்ற அளவில் இருக்க, இங்கிலாந்து-ஜெர்மனியில் ₹4000-7000, ஜப்பானில் ₹5000-8000 ஆக உள்ளது.


அமெரிக்கா, ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் LPG பயன்படுத்தப்படுகிறது. 2014-ல் 11 கோடியாக இருந்த இணைப்புகள் இப்போது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இது ஏழை மக்களை விறகு அடுப்பில் இருந்து மீட்ட சீர்திருத்தம் என்கிறார். விலையை விட தாராளமாக கிடைப்பதே முக்கியம் என்றும், உலகிலேயே அதிக வீட்டு LPG இணைப்பு கொண்ட நாடு இந்தியா என்றும் குறிப்பிடுகிறார்.


வீட்டு சிலிண்டர் விலை உயர்வை அரசு தவிர்த்து சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் வணிக சிலிண்டர் விலை உயர்வை வைத்து ஒட்டுமொத்த LPG விலையும் உயர்ந்தது போல எதிர்க்கட்சிகள் மாயை உருவாக்குகின்றன என குற்றம்சாட்டுகிறார். உலகளாவிய நெருக்கடியை அரசு திறம்பட கையாளும் போது குழப்பம் ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது. பாஜக அரசின் நடவடிக்கைகளால் மட்டுமே தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது, இல்லையென்றால் மற்ற நாடுகளை போல இந்திய மக்களும் பெரும் இன்னலை சந்தித்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.