மேற்கு வங்கத்தில் முதல் பாஜக ஆட்சி!! சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்பு!!
ஏப்ரல் 23, 29 தேதிகளில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திரிணாமுல் காங்கிரசுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து மே 9, 2026 இன்று காலை கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதானத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் சுவேந்து அதிகாரி மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார்.
அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், நந்திகிராம், பவானிபூர் இரண்டிலும் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி தோற்கடித்ததாக கூறினார். தமிழகம், சிக்கிம், பிஹார், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சிக்கு வரமுடியவில்லை என சுட்டிக்காட்டி, ராகுல் காந்தி தலைமையால் இண்டியா கூட்டணியும் உடைந்துள்ளதாக விமர்சித்தார்.
3 எம்எல்ஏக்களில் இருந்து தற்போது 207 எம்எல்ஏக்களாக பாஜக வளர்ந்துள்ளது. 9 மாவட்டங்களில் திரிணாமுலுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இரட்டை இன்ஜின் ஆட்சியால் மாநிலம் வேகமாக முன்னேறும் என்றும், ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார். இது பாஜக கூட்டணியின் 21-வது மாநில ஆட்சி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


