புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் என்டிஏ ஆட்சி!! 13-ம் தேதி முதல்வராக பதவியேற்பு!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. 30 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 16 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 18 எம்எல்ஏக்கள் பலத்துடன் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.


என்டிஏ கூட்டணி தலைவராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக நமச்சிவாயம் தேர்வானார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கின. இதையடுத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ரங்கசாமி கடிதம் அளித்தார்.


வரும் 13-ம் தேதி காலை ஆளுநர் மாளிகையில் முதல்வராக ரங்கசாமி பதவியேற்க உள்ளார். பாஜக தரப்பில் சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர் பதவிகள் கோரப்பட்டு, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார். அமைச்சர்கள் யார் என்பது பதவியேற்பின் போது தெரியும் என ரங்கசாமி கூறினார். ஆளுநர் அளித்த கடிதம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.