ஃபுட் ரிவ்யூ யூடியூபர்ஸ்க்கு செக் வைத்த உணவுப் பாதுகாப்புத்துறை! - என்ன அறிவுறுத்தல் தெரியுமா? | Live Updates

YOUTUBERS-க்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்!

follow-youtube

FSSAI உரிமம் உள்ள கடைகளில் மட்டுமே YOUTUBERS FOOD REVIEW செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. கடையின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் மட்டுமே காட்சிப்படுத்தி ஃபுட் ரிவ்யூ எடுக்கக் கூடாது. சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா எனவும் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

தைலாபுரத்தில் இல்லத்தில் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு!

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி குடும்பத்துடன் வருகை.

பாமக தலைவர் அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்றார் தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ்.

இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி சுமார் 3 நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுததாக தகவல்.

ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெற குடும்பத்துடன் தைலாபுரம் சென்றார் அன்புமணி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதிவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பதிவு

உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

திமுகவின் Gen Z ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை காவல்துறை கைது செய்ய முயன்றதை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"கழகத்தின் Gen Z இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.

கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்".

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட, அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியிலும், ராமதாஸ் தரப்பு சசிகலா கூட்டணியிலும் என்று தனித்தனியே போட்டியிட்டனர்.

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு, இன்று ராமதாஸை சந்திக்க விழுப்புரம் தைலாபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார் அன்புமணி.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜார்ஜ் குரியன். இவரிடம் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் கூடுதல் பொறுப்பும் இருந்து வந்தது.

அவருடைய ராஜ்ய சபா பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜார்ஜ் குரியன்.

ஆனால், இவரை மீண்டும் ராஜ்ய சபா பதவிக்கு பரிந்துரைக்கவில்லை பாஜக.

பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

மேலும், இன்னொரு மத்திய இணையமைச்சரான ரவ்னீத் சிங் பிட்டுவின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், இவரது அமைச்சர் பதவியும் காலியாகிறது.

இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்கிற பேச்சுகள் அடிப்படுகின்றன. நேற்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்ததும் இந்தப் பேச்சுகளை இன்னும் வலுவாக்குகிறது.

மேலும், பாஜக ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கொள்கையை முன்னெடுத்தாலும், பலருக்கும் அமைச்சர் பதவி பறிப்போகும். இதனால், அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இன்று கூடுகிறது சென்னை மாநகராட்சி கூட்டம்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு, இன்று (ஜூன் 24, 2026) சென்னை மாநகராட்சி கூட்டம் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை மாநகராட்சி எல்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

விஜய்-க்கு பெ.சண்முகம் பதிலடி

நேற்று (ஜூன் 23, 2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், "நாங்கள் யார் தயவிலும் ஆட்சி அமைக்கவில்லை. மக்கள் தயவில்தான் ஆட்சியமைத்திருக்கிறோம்" என்று பேசியிருந்தார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், "அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அவர் பேசியதைப் பார்க்க வேண்டும். அன்று இருந்த சூழ்நிலையில், நாங்கள் ஆதரிக்காமல் போயிருந்தால், பதவியேற்பு என்பதே நடந்திருக்காது. அதற்கு மாறாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்திருக்கும்." என்று பேசியுள்ளார்.

விஜய் - பெ.சண்முகம்
விஜய் - பெ.சண்முகம்

தமிழக அரசியல், இந்திய அரசியல் பற்றிய இன்றைய முக்கிய செய்திகளை இந்த Live Blog-ல் ஃபாலோ செய்யுங்க மக்களே!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.