”இது என்னுடைய கடைசியாக இருப்பது நல்லது” - 92 வயதில் 5ஆம் திருமணம் செய்யும் ஊடக அதிபர்
பழமையான ஊடக அதிபரான ரூபர்ட் முர்டோக் தனது 95வது வயதில் காதலில் விழுந்துள்ளதாகவும், 5வது முறையாக திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சான் பிரான்ஸ்கோவைச் சேர்ந்த 66 வயதான முன்னாள் போலீஸ் சாப்ளின் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை முர்டோக் காதலித்து வருகிறார். அமெரிக்க பாடகரும், ஊடக நிர்வாகியுமான செஸ்டர் ஸ்மித்தின் மனைவியான ஆன் லெஸ்லி, கணவர் இறந்தபிறகு தற்போது முர்டோக்கிடம் காதல் வசப்பட்டுள்ளார். ”நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். காதலில் விழுவதற்கு பயமாக இருந்தது. ஆனால் இதுதான் என்னுடைய கடைசி காதலாக இருக்கும். இருந்தால் நல்லது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தனது செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் முர்டோக். இவர் தனது 4வது மனைவியான மாடல் ஜெர்ரி ஹாலை ஆறு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.
ஆஸ்திரேலியரான முர்டோக், The Wall Street Journal, Fox News மற்றும் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் உட்பட 20 பில்லியன் டாலர் சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று தெரிவித்திருக்கிறது Forbes.

கடந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் தான் தொகுத்துவழங்கிய நிகழ்ச்சியில் தனது காதலி ஆன் லெஸ்லியை சந்தித்ததாகவும், வெகுசீக்கிரத்தில் இருவரும் மீதமுள்ள வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்துவாழ முடிவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
”இது என்னுடைய முதல் அனுபவம் அல்ல. 70 வயதை நெருங்கினாலே வாழ்க்கையில் கடைசி பாதி என்று அர்த்தம். நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். என்னுடைய இந்த முடிவை குறித்து எனது நண்பர்கள் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் லெஸ்லி. கோடைகாலத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என இரு இடங்களில் திருமண நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் 5 திருமணங்களின்மூலம் முர்டோக்கிற்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


