அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு குடைச்சல் கொடுக்கிறார்கள் - அமைச்சர் கீர்த்தனா |Live Updates

குடைச்சல் கொடுக்கிறார்கள்!

தவெக அமைச்சர் கீர்த்தனா

``முந்தைய தி.மு.க ஆட்சியில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் சில தனிநபர்கள் மூலமாகப் புதிய அரசுக்குக் குடைச்சல்களும், சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களும் (Trolls) பரப்பப்பட்டு வருகிறது. 5 ஆண்டு காலம் மக்களை ஏமாற்றியதால்தான் மக்கள் தி.மு.க-வை நிராகரித்து, புதிய மாற்றமாகத் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். மக்கள் தந்த தீர்ப்பை மதிக்காமல் தற்குறிகள் என விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் இழிவுபடுத்துவதாகும்." - அமைச்சர் கீர்த்தனா

இது தலைமையின் தவறு!

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

அ.தி.மு.க உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் த.வெ.கவில் இணையும் நிகழ்வு பனையூரில் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் செங்கோட்டையனைக் குறிப்பிட்டு, ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் 50 வருடம் பயணித்த ஒரு அனுபவசாலியை ஒரு கட்சி தூக்கி எரியுதுனா அது தொண்டர்கள் தவறு அல்ல அது கட்சி தலைமையின் தவறு" என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.

"திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியாது"- காதர் கொய்தீன்

விஜய் - காதர் மொய்தீன்
விஜய் - காதர் மொய்தீன்

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியது.சென்னையில் நடைபெற்ற ஐயூஎம்எல் மாநில குழு கூட்டத்தில் அக்கட்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் கொய்தீன், "60 ஆண்டுகாலமாக திமுக தலைமையிலானக் கூட்டணியில் ஐயுஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார் என தேர்தலில் உழைத்தோம். ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தது. தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

கூட்டணி முறிந்தது..!

காதர் மொய்தீன்
காதர் மொய்தீன்

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியது.சென்னையில் நடைபெற்ற ஐயூஎம்எல் மாநில குழு கூட்டத்தில் அக்கட்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

வகுப்பறையில் தவெகவினர் ரீலிஸ் செய்வதை முதல்வரே ஏற்றுகொள்ள மாட்டார்- அண்ணாமலை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், "கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு விஜய் அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு… pic.twitter.com/63j9RDS1dC

— K.Annamalai (@annamalai_k) June 20, 2026

இதுதான் அந்த மாற்றமா? விஜய் சார் -அதிமுக கேள்வி 

காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே அரசு வகுப்பறையில் முதல்வர் விஜய் அவர்கள் புகைப்படத்தை சுவரில் மாட்டி அதனை ரீல்ஸ் ஆக எடுத்து வெளியிட்ட தவெக ஆச்சரியக்குறிகள்..

இதுதான்
நீங்க சொன்ன அந்த மாற்றமா @actorvijay சார்!

நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்... #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் pic.twitter.com/jAsBrxCqyk

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 20, 2026

"இந்த பக்கம் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு பேசத் தெரியாமல் இல்லை!"- திமுக எம்எல்ஏக்களுக்கு ராஜ்மோகன் பதிலடி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் நேற்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்ற பல விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

"இந்த பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு பேசத் தெரியாமல் இல்லை!" - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #TNAssembly | #VikatanReels | #TNGovt pic.twitter.com/43qVx4EsSQ

— விகடன் (@vikatan) June 19, 2026

அந்த வீடியோவில், திமுக எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியை பார்த்து கூச்சலிடுகின்றனர். அதற்கு அமைச்சர் ராஜ்மோகன், " இந்த பக்கம் இருக்கும் எங்களுக்கு பேசத் தெரியாமல் இல்லை.

வெற்றி தலைவரின் கடைக்கண் பார்வைக்காக கட்டுப்பட்டு ஒழுக்கத்தோடு இருக்கிறோம். இனிமேலும் ஒழுக்கத்தோடு இருப்போம். அதே சபை ஒழுக்கத்தையும், ஒத்துழைப்பையும் அனைத்து கட்சி தோழர்களிடமும் விரும்பி கேட்டுக்கொள்கிறேன்"என்று பேசியிருக்கிறார்.

மோடி டஃப் ஆனவர்-  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் உங்கள் பிடித்த தலைவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், " மோடி மிகவும் சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன்.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

இந்தியாவில் முன்பு அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்த சூழலில் பிரதமர் மோடி பொறுப்பேற்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஆட்சியை வழங்கி வருகிறார். மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவரிடம் ஒரு சிறந்த அமைதி இருக்கிறது. ஆனால் அவர் உண்மையில் அமைதியானவர் அல்ல. மிகவும் டஃப் ஆனவர்" என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் மீது ஒபாமா குற்றச்சாட்டு!

அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. இந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் அதிகாரிகள் சுவிட்சர்லாந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா - ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப்- பராக் ஒபாமா
ட்ரம்ப்- பராக் ஒபாமா

பேச்சுவார்த்தை ரத்தானதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் போர் குறித்து அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்ரம்ப் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், " தற்போது ஒரு போரை நடத்தி, பில்லியன் கணக்கான டாலர்களை வீணடித்து, ஏகப்பட்ட உயிர்களையும் இழந்துள்ளோம்.

இவ்வளவு இழந்தும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்தை விட, ஒரு மோசமான இடத்திற்குத்தான் வந்து நிற்கிறோம். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என ஏற்கனவே ஒரு நல்ல ஒப்பந்தம் இருந்தது. ட்ரம்ப் நிர்வாகம் அதிலிருந்து வெளியேறியதால்தான், அணுசக்தி திறனை ஈரான் மேலும் அதிகரித்தது" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.