7 கோடி ஊழியர்களுக்கு நற்செய்தி; 2022-23-ம் ஆண்டுக்கான ஊழியர்களின் PF வட்டி விகிதம் உயர்வு!

ஓய்வூதிய நிதிகளை சேமித்துவைக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)-வில், வட்டி விகிதம் 8.15% என 2022-23ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடந்த வருடமான 2021-22-ல் இந்த தொகை 8.1% என நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைவானதாக இருந்தது. இதற்கு முன் 1977-78-ல் தான் இந்த வட்டி விகிதம் 8% என இதன் வட்டிவிகிதம் குறைந்திருந்தது.

image

இவ்வருடத்துக்கான அறிவிப்பில் PTI, "ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) சார்பாக செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளது.

EPFO fixes 8.15 pc interest rate on employees provident fund for 2022-23: Sources

— Press Trust of India (@PTI_News) March 28, 2023

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்த வட்டி விகிதத்தை அரசின் நிதி அமைச்சகம் சரிபார்த்து ஒப்புதலளித்த பின்னரே பின்னரே வழங்கும் என தெரிகிறது. முன்னதாக EPFO அதன் சந்தாதாரர்களுக்கு 2016-17 இல் 8.65 சதவீத வட்டி விகிதத்தையும் 2017-18 இல் 8.55 சதவீதத்தையும் வழங்கியது. 2015-16ல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15ல் 8.75 சதவீத வட்டியை வழங்கியது, இது 2012-13ல் 8.5 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது. 2011-12ல் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அது இருந்தது.

தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.