விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கியதாக நெல்லை ஏஎஸ்பி மீது அதிர்ச்சி புகார்! நடந்தது என்ன?

விசாரணைக்கைதிகளின் பல்லை பிடுங்கியதாக எழுந்த அதிர்ச்சி புகாரில் நெல்லை கூடுதல் எஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறு வழக்குகளில் தொடர்புடைய விசாரணைக்கைதிகளின் பல்லைப்பிடுங்கியதாக லெட்சுமி சங்கர் , சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய மூவரும் பல்வீர் சிங் மீது புகார் தொடுத்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நெல்லை கூடுதல் எஸ்பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

image

பல்வீர் சிங் பதவிக்கு வந்த பிறகு குற்றங்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்திருப்பதாகவும், கஞ்சா கடத்தல் குறைந்துள்ளதாகவும், கொலை குற்றங்கள் இதுவரை நடைபெறவில்லை எனவும், இவர் ஒரு நேர்மையான அதிகாரி எனவும் அப்பகுதி மக்களின் கருத்தாகும். ஆனால் குற்றவாளிளுக்கு எதிராக இவரது தண்டனை என்பது கடும் நடவடிக்கையாக இருக்கும் எனவும் இவரைப்பற்றிய குற்றச்சாட்டினையும் முன் வைக்கின்றனர்.

image

தற்காலிகமாக, இவரது பதவிக்கு வெங்கடேசன் என்பவர் டிஎஸ்பி யாக பணி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.