TN Assembly Elections 2026: நிமிடத்துக்கு நிமிடம் புது உச்சம்; 84.29 சதவீத வாக்குகள் பதிவு | TN Polling Live Updates

வாக்குப்பதிவு நிலவரம்!

View this post on Instagram

7 மணியைக் கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு!

சென்னையில் சில வாக்குச்சாவடிகளில் 7 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு தொடர்கிறது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில், டோக்கன் வைத்திருப்போர் சில வாக்குச்சாவடி மையங்களில் வரிசையில் நின்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

6 மணி நிலவரம்; 84.29 சதவீத வாக்குகள் பதிவு!

6 மணி நிலவரப்படி 84.29 சதவீத வாக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியிருக்கின்றன. இன்னும் டோக்கன்கள் வழங்கப்பட்டோர் வாக்களிக்க இருக்கின்றனர். எனவே 85-86 சதவீத வாக்குகள் மொத்தத்தில் பதிவாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

`சென்னை மக்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்! - தேர்தல் ஆணையம்

சென்னையில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்கள், இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மாலை 6 மணி நெருங்கும் வேளையிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதால், டோக்கன் முறை மூலம் இந்த நேர நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிவாக்கு எண்ணிக்கையில் சாதனை... 90% சாத்தியமா?

View this post on Instagram

5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், இன்னும் கூடுதல் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

சென்னையில் 68.13 சதவீத வாக்குப்பதிவு!

சட்டப்பேரவை தேர்தல் - பிற்பகல் 3 மணி நிலவரம்:

தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு - 70%

சென்னையில் வாக்குப்பதிவு - 68.13%

வாக்குப்பதிவு அதிகமாக உள்ள மாவட்டம் - நாமக்கல் 76.43%

வாக்குப்பதிவு குறைவாக உள்ள மாவட்டம் - கன்னியாகுமரி 61.95%

70 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 3 மணி நிலவரப்படி, 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மீதமுள்ள மூன்று மணி நேரத்தில் இன்னும் அதிகமாக வாக்குகள் பதிவாகும் என கணிக்கப்படுகிறது. அதிகபட்சமாக, கரூர், நாமக்கல்லில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மதியம் 1 மணி நிலவரப்படி, 56.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிகபட்சமாக, குமாரபாளையம் தொகுதியில் 67.63 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இம்முறை 17 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகி இருக்கின்றன.

மதியம் 1 மணி நிலவரம்!

View this post on Instagram

தமிழ்நாடு - பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குகள் பதிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் ஒரு மணி வரை 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது!.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை காட்டிலும்,17.2 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது.

பொதுவாக 12 மணி முதல் 3 மணி வரை வாக்க பதிவு மந்தமாக பதிவாகும் நிலையில் இந்த முறை தொடர் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்வத்துடன் ஜனநாயகக் கடமை ஆற்றிய இளம் தலைமுறை வாக்காளர்கள் - Polling Day Clicks

கைது செய்யப்படும் தவெக-வினர்!

திருப்பத்தூரில் திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக நகர செயலர் ஷேக் அஸ்லாம் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதுபோல, விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சக்திவேல் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

விராலிமலை வாக்குச் சாவடியில் வாக்களித்த 26 திருநங்கைகள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் அருகே உள்ள இளையாவயல் வாக்குச் சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களித்து தங்களது ஜன நாயகக் கடமையை ஆற்றி உள்ளனர். இங்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுக தரப்பில் போட்டியிடுகிறார்.

காரைக்குடி தொகுதி கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம்.

எம்.பி.கார்த்தி சிதம்பரம்.
எம்.பி.கார்த்தி சிதம்பரம்.

வாக்களித்த சூர்யா - ஜோதிகா!

நடிகர் சூர்யாவும், அவருடைய மனைவி ஜோதிகாவும் சென்னை தி.நகர் தொகுதியில் வாக்கு செலுத்தினர்.

சூர்யா - ஜோதிகா
சூர்யா - ஜோதிகா (Enhanced By AI)

11 சதவீதம் உயர்வு!

காலை 11 மணி வரையிலான நிலவரத்தை, 2021-ம் ஆண்டுடம் ஒப்பிட்டு பார்க்கையில், இம்முறை 11 சதவீதம் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருக்க்ன்றன.

சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த வாக்களித்தார்.

வாக்கு இயந்திரம் உடைப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்திலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில், வாக்கு இயந்திரத்தை சுயேட்சை வேட்பாளரின் ஏஜெண்ட் ஒருவர் உடைத்திருக்கிறார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு நிலவுகிறது.

விளவங்கோடு சட்டமன்ற பாஜக வேட்பாளர் விஜயதரணி நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் அரசு பள்ளியில் வாக்களித்தார்!

ஜனநாயகக் கடமையாற்றக் காத்திருக்கும் வாக்காளர்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: 11 மணி வாக்குப் பதிவு நிலவரம்!

மரக்காணம் பகுதியில் வாக்களிக்க வந்த பழங்குடியினர்!

`மக்களிடமிருந்து பறித்தது மக்களிடமே செல்வது ஒரு வகையில் மகிழ்ச்சி - வேல்முருகன்

கடலூர்:

``வாக்காளர்களுக்கு திமுக-வினர் 2000 4000 என பணம் அளித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது சட்டத்திற்கு புறம்பானது. இருப்பினும் மக்களிடமிருந்து பறித்தது மக்களிடமே செல்வது ஒரு வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது." - த.வா.க தலைவர் வேல்முருகன்

TN Election: `உதயநிதி டு நயினார் குடும்பத்துடன் வந்து வாக்களித்த அரசியல் தலைவர்கள்- Poll Day Clicks

37.56 சதவீத வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி, 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

சாலை மறியல்!

திமுக-வினர் வாக்கிற்கு டோக்கன் கொடுப்பதாக, சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் சாலை மறியல்.

தேர்தலை புறக்கணிக்கும் கிராமம்!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும், வாக்களிக்க மக்கள் வரவில்லை. சமீபத்தில் அங்கு நடந்த இரட்டைக் கொலையை கண்டித்து, அக்கிராமத்து மக்கள் தேர்தலை புறக்கணிப்ப்பதாக தகவல்.

வாக்குச்சாவடியில் தேமுதிகவினர்!

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில், பிரமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வாக்கு செலுத்தினர். திமுக கூட்டணியில், பிரமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலும், விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கிறார்கள்.

வாக்குச்சாவடியில் தேமுதிக
வாக்குச்சாவடியில் தேமுதிக

வாக்கு செலுத்திய த்ரிஷா!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் த்ரிஷா, அவருடைய தாயாருடன் சென்று வாக்களித்தார்.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா

கள்ள ஓட்டு புகார் - ஈரோட்டில் அதிர்ச்சி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அலுவரிடம் வாக்காளர் ஒருவர் புகாரளித்திருக்கிறார். குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், தன்னுடைய ஓட்டு ஏற்கெனவே போடப்பட்டு விட்டதாக புகாரளித்திருக்கிறார்.

காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி சாக்கோட்டை பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை செலுத்த ஆர்வம் காட்டும் வாக்காளர்கள்!

ஆர்வமுடன் வாக்களிக்கும் முதல் முறை வாக்காளர்கள்!

ஆர்வமுடன் வாக்களிக்கும் பழங்குடியினப் பெண்கள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள சோலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்த கோத்தர் பழங்குடியின் பெண்கள் ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்!

திமுக - பாஜக-வினர் இடையே தள்ளுமுள்ளு - ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் பரபரப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில், பாஜக - திமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

வாக்களித்த வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்

கோவை, சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாக்களித்தார்

வாக்களித்த நடிகர்கள்!

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், துருவ் விக்ரம், அருண் விஜய், கெளதம் கார்த்திக், ஜெய், சசிகுமார், இயக்குநர்கள் அ.வினோத், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து அவரவர் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

தனுஷ்
தனுஷ்

தி.மு.க பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளருமான துரைமுருகன் வாக்களித்தார்.

துரைமுருகன்
துரைமுருகன்

பதிவான 17.69 சதவீத வாக்குகள்!

வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் காலையிலேயே வந்து வாக்கு செலுத்த தொடங்கிவிட்டனர். காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

தமிழ்நாடு வெல்லும்! - ஸ்டாலின்

சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் எப்படி ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேனோ, அதுபோல தமிழக மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்!" என்றார்,

திருவெறும்பூர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.