`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்து தப்பிக்க சூப்பர் வழியிருக்கிறது.

நம்முடைய மின்சார பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக மட்டுமல்லாமல், மின்சார உற்பத்தியாளராக மாற வேண்டியது அவசியத்தில் இருக்கிறோம்.

ஆனால், எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன. இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால்போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேலான குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. ஆனால், இதில் அதிகமானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். குஜராத்தில் 6 லட்சம் பேர் பயனடைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

இலவச மின்சாரம்

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடன், டார்லிங் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது. சோலார் பற்றி பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம்.

இலவச மின்சாரம்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 18-ம் தேதி புதுச்சேரியில் நடக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் சோலார் பற்றி தெளிவான அனைத்து கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வருகிறார் டார்லிங் நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன். மேலும் இந்த நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசுகிறார்.

நிகழ்ச்சி விவரங்கள்:

Date: ஏப்ரல் 18, 2026, Time: மாலை 6.00 - 8.00

முகவரி: Shenbaga Hotel & Convention Centre, No.432, MG Road, Muthialpet, Puducherry 605003

கலந்துகொள்ளும் அனைவருக்கும் டார்லிங் நிறுவனத்தின் நிச்சயப் பரிசு உண்டு.

இலவச மின்சாரம்

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://events.vikatan.com/505-solar-awareness-meet/

இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் டார்லிங் நிறுவனம் வழங்கும் நிச்சயப் பரிசு உள்ளது. பதிவு செய்ய: https://events.vikatan.com/505-solar-awareness-meet/

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.