LIK: என் மீது நம்பிக்கை இல்லாத சமயத்திலும் இதைச் செய்தேன்! - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசினார்கள்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், "இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருப்பதே ஒரு பெரிய வெற்றிதான். கனவு பெரிதாக இருந்தது என்றால், நிறைய சூழல்கள் காரணமாக எது சுலபமாக நடக்குமோ அந்த கம்ஃபோர்ட் ஜோனுக்குள் போய்விடுவோம்.
ஆனால், அதை உடைத்து, என் மீது நம்பிக்கை இல்லாத சமயத்திலும் என்னுடைய கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து இதைச் செய்தோம்.
படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன. படம் மெதுவாகப் நகர்கிறது என்று சொல்கிறார்கள். அனைத்தையும் ஆக்கபூர்வமான விமர்சனமாகப் பார்க்கிறேன்.
புதிதாக முயற்சி செய்த விஷயங்களுக்குக் கைதட்டல்கள் கிடைக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இருந்ததுனால்தான் இப்படம் நடந்திருக்கிறது. இல்லை என்றால் நடந்திருக்காது.
இன்றைக்கு இயக்குநர்களின் சூழல் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. ஜனநாயகன் லீக் ஆகியிருக்கிறது. என்னுடைய நண்பர் ஹெச்.வினோத்துக்கு ஆறுதல் சொல்கிறேன். இது மரணத்தைப் போன்ற வலியைக் கொடுக்கும்." என்றார்.

பிரதீப் ரங்கநாதன் பற்றி, "100 சதவிகிதத்தைக் கொடுக்கக்கூடிய ஹீரோ எனக்குக் கிடைத்தார். பிரதீப் ரங்கநாதன் பெயருக்காக மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. இந்தப் படமும் அவருடைய 100 கோடி படமாகும்.
எஸ்.ஜே.சூர்யாவைத் தாண்டி சூர்யன் கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் இதற்குள் பொருத்திப் பார்க்க முடியவில்லை.
சீமான் அண்ணன் அவருடைய அரசியல் விஷயங்களைத் தாண்டி எங்களுடன் ஜாலியாகப் பழகினார். என்னுடைய வேலையை ரொம்பவே சுலபமாகச் செய்வதற்கு என்னை அனுமதித்தார்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


