திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ என்ற பெயரில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டிருக்கிறார். அதன்படி,

வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக

* குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.

* ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போது வழங்கப்படும்.

* பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் Zero FIR பதிவு முறை CCTV கண்காணிப்பு வசதிகள் செய்யப்படும்

* பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ₹50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும்.

* முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.

* திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வழக்கம் மீண்டும் தொடங்கப்படும்.

* போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை உருவாக்கப்படும்.

* பெண்கள் இரு சக்கர மின் வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்.

வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக
வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக

* மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும்.

* தமிழ்நாட்டின் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.

* மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.