பேசில் ஜோசப்பிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன் - டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருக்கும் ‘பள்ளிச்சட்டாம்பி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பள்ளிச்சட்டம்பி

இப்படத்தின் ரிலீஸையொட்டி பல்வேறு இடங்களிலும் படக்குழுவினர் ப்ரமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி, சமீபத்திய பேட்டி ஒன்றில் டொவினோ தாமஸ், அவருக்கும் பேசில் ஜோசப்பிற்கும் இடையேயான நட்பு பற்றி பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் டொவினோ, “பேசில் ஜோசப்பும் நானும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். அவருக்காக எதையும் செய்ய நான் தயங்க மாட்டேன்.

பேசில், நான் சொல்லும் காமெடிகளை உடனடியாகப் புரிந்துகொள்வார். எங்கள் இருவருக்கும் இடையில் ஒருவருக்கொருவர் முட்டாள்தனமான ஜோக்குகளை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அதுபோல, நாங்கள் எப்போதும் டிராமாட்டிக் உரையாடல்களைத் தவிர்க்க முயல்வோம்.

Tovino Thomas
Tovino Thomas

சொல்லப்போனால், எங்கும் நாங்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

‘நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ போன்ற உணர்ச்சிகரமான வார்த்தைகளை நாங்கள் சொல்லிக் கொள்வது அரிது.

சில விஷயங்களைப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்திருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

பேசில் ஜோசப் இயக்கிய ‘கோதா’, ‘மின்னல் முரளி’ என இரண்டு படங்களிலும் டொவினோ தாமஸ்தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.